/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காஞ்சி மடத்தின் 71வது பீடாதிபதி ஜன கல்யாண் இயக்கம் வாழ்த்து
/
காஞ்சி மடத்தின் 71வது பீடாதிபதி ஜன கல்யாண் இயக்கம் வாழ்த்து
காஞ்சி மடத்தின் 71வது பீடாதிபதி ஜன கல்யாண் இயக்கம் வாழ்த்து
காஞ்சி மடத்தின் 71வது பீடாதிபதி ஜன கல்யாண் இயக்கம் வாழ்த்து
ADDED : மே 17, 2025 11:15 PM
பெங்களூரு: ஜன கல்யாண் இயக்கத்தின் கர்நாடக மாநிலத் தலைவர் தளவாய் நாராயணசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
காஞ்சி மடத்தின் 71வது பீடாதிபதியாக கொலுவீற்று அலங்கரிக்கும் ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், காஞ்சி மடத்தின் புதிய பெரியவர்.
எப்படி குளவி கொட்டி கொட்டி தன் வாரிசை குளவியாக்குகிறதோ, எப்படி பறவைகள் தன் குஞ்சுகளுக்கு இரையை தன் வாயில் தருகிறதோ, அதுபோன்று அணுஅணுவாக கல்வி, கேள்வி, வேதம், இவற்றைக் கண்டு, அவரை 71வது பீடாதிபதியாக்கிய பெருமைக்கு சொந்தக்காரர் ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.
71வது பீடாதிபதி, காஞ்சி மடத்தின் மீது அளப்பறியா பக்தி கொண்ட குடும்பத்து வழி வந்தவர் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள். கருணை கடாட்சத்துக்கு இலக்கமான குடும்பம். இது காஞ்சி மடத்தின் வழிப்பெருமை.
காடியில் பிறந்த ஆதிசங்கரரின் காலடி பட்டு, காலடி பற்றி நடக்கும் காஞ்சி பீடம்.
ஸ்ரீ சத்ய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், 71வது பீடாதிபதியான சம்பவமும் வரலாற்று பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாள்.
இன்றைய தலைமுறையில் வாழும் நாம், காஞ்சி மடத்தில் நான்கு தலைமுறைகளையும் கண்டு அருள் பெற்றவராகிறோம்.
புலவர் கல்யாண் குமார் எழுதிய 'காஞ்சி பெரியவர் பிள்ளை தமிழ்' 71வது பீடாதிபதி பதவி ஏற்றது நினைவாக வெளிவர உள்ளது.
காஞ்சிக்கு எத்தனையோ பெருமை கலை, இலக்கியங்களுக்கு உண்டு. ஆன்மிகத்தின் அரணாக காஞ்சி மடம் திகழ்கிறது.
இந்த 71வது பீடாதிபதி விழா, யார் யார் வந்தனர் என்பதை விட, யார் யார் வரவில்லை என்பது பெருமைப்பட வைக்கிறது.
ஆதிசங்கரர் காலம் துவங்கி ஸ்ரீமடம் கண்டு இன்று 71வது பீடாதிபதியையும் நமக்கு வழங்கிய முப்பெரும் ஆச்சார்யார்களையும் வணங்கி மகிழ்வோம்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.