/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஜவஹர்லால் நேரு கோளரங்கம் நுழைவு கட்டணம் உயர்வு
/
ஜவஹர்லால் நேரு கோளரங்கம் நுழைவு கட்டணம் உயர்வு
ADDED : ஏப் 02, 2025 06:40 AM

பெங்களூரு : பெங்களூரு ஜவஹர்லால் நேரு கோளரங்கத்தில், நேற்று முதல் நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.
பெங்களூரு ராஜ்பவன் சாலையில் ஜே.என்.பி., எனும் ஜவஹர்லால் நேரு கோளரங்கம் அமைந்து உள்ளது. 1989ல் அமைக்கப்பட்ட இந்த கோளரங்கத்தை, பெங்களூரு அறிவியல் கல்வி சங்கத்தினர் நிர்வகித்து வருகின்றனர்.
ஆண்டுதோறும் 3 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் வருகின்றனர். அறிவியல் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள, பள்ளி மாணவர்கள் இங்கு வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
இங்கு மாதந்தோறும் அறிவியல் தொடர்பான நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், நடக்கிறது. தினமும் விண்வெளி தொடர்பான திரைப்படங்கள், 'ஸ்கை தியேட்டரில்' திரையிடப்படுகின்றன. ஐந்து ஆண்டுகளுக்கு பின், நுழைவு கட்டணத்தை சங்கத்தினர் உயர்த்தி உள்ளனர்.
பெரியவர்களுக்கு 75 ரூபாயில் இருந்து 100 ரூபாயாகவும்; 16 வயதுக்கு உட்பட்ட மாணவ - மாணவியருக்கு 50 ரூபாயில் இருந்து 60 ரூபாயாகவும்; பள்ளி மாணவருக்கான கட்டணம் 40 ரூபாயில் இருந்து 60 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.
அதுபோன்று, பள்ளி மாணவர் குழுவுக்கு 8,000 ரூபாயில் இருந்து 10,000 ரூபாயாகவும்; மற்றவர்கள் குழுவாக வருவோருக்கு, 15,000 ரூபாயில் இருந்து 20,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

