/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
லாரி மீது ஜீப் மோதி விபத்து: அய்யப்ப பக்தர்கள் 4 பேர் பலி
/
லாரி மீது ஜீப் மோதி விபத்து: அய்யப்ப பக்தர்கள் 4 பேர் பலி
லாரி மீது ஜீப் மோதி விபத்து: அய்யப்ப பக்தர்கள் 4 பேர் பலி
லாரி மீது ஜீப் மோதி விபத்து: அய்யப்ப பக்தர்கள் 4 பேர் பலி
ADDED : ஜன 10, 2026 06:50 AM
துமகூரு: சாலையோரம் நின்ற லாரி மீது ஜீப் மோதியதில், அய்யப்ப பக்தர்கள் நான்கு பேர் பலியாகினர்.
துமகூரு மாவட்டம் பெல்லாவி கிராஸ் பகுதியில், நேற்று காலை, 6:00 மணிக்கு, குரூசர் ஜீப் சென்றது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் தறிகெட்டு ஓடி சாலையோரமாக நின்ற லாரியின் பின்பக்கம் மோதியது. கேபினில் துாங்கி கொண்டிருந்த லாரி டிரைவர், கிளினீர் வெளியே வந்து பார்த்தனர்.
கிராம மக்களுக்கும், கோரா போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். ஜீப்பிற்குள் சிக்கியவர்களை மீட்க முயற்சி நடந்தது. இடிபாடுகளில் சிக்கி சிறுமி உட்பட நான்கு பேர் இறந்தது தெரிய வந்தது. படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய ஏழு பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
போலீசார் விசாரணையில் உயிரிழந்தவர்கள் கொப்பால் மாவட்டம் குகனுாரின் சாக் ஷி, 7, மருதப்பா, 45, வெங்கடேஷ், 30, கவிசித்தப்பா, 28 என்பதும், படுகாயம் அடைந்தவர் ஸ்ரீநாத், 32, பிரதீப் குமார், 28, ராஜப்பா, 45, ஹுலிகப்பா, 32, ராகேஷ், 24, திருப்பதி, 33, சீனிவாஸ், 32 என்பதும், தெரிய வந்தது.
அய்யப்ப பக்தர்களான இவர்கள் சபரி மலைக்கு சென்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பிய போது விபத்து நடந்தது தெரிய வந்தது. டிரைவர் துாக்க கலக்கத்தில் இருந்ததால், லாரி மீது மோதியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

