/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
19 மசோதாக்களுக்கு ஒப்புதல் தந்தார் கர்நாடக கவர்னர்
/
19 மசோதாக்களுக்கு ஒப்புதல் தந்தார் கர்நாடக கவர்னர்
19 மசோதாக்களுக்கு ஒப்புதல் தந்தார் கர்நாடக கவர்னர்
19 மசோதாக்களுக்கு ஒப்புதல் தந்தார் கர்நாடக கவர்னர்
ADDED : ஜன 10, 2026 06:51 AM

பெங்களூரு: முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு அனுப்பி வைத்த, 19 மசோதாக்களுக்கு, கவர்னர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார்.
கடந்த, 2025 டிசம்பரில், பெலகாவியின் சுவர்ண விதான் சவுதாவில் நடந்த குளிர்கால கூட்டத்தொடரில், பல்வேறு மசோதாக்கள் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்களை கவர்னரின் ஒப்புதலுக்காக அரசு அனுப்பி வைத்துள்ளது. அவற்றில் கர்நாடக வாடகை திருத்த மசோதா, வறண்ட பகுதிகள் மேம்பாட்டு ஆணைய மசோதா, மலைப்பகுதி மேம்பாட்டு ஆணைய மசோதா, கர்நாடக சாலை பாதுகாப்பு ஆணைய திருத்த மசோதா உட்பட, 19 மசோதாக்களுக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் நேற்று ஒப்புதல் அளித்துள்ளார். கையெழுத்திடுவதற்கு முன், சட்ட வல்லுநர்களின் கருத்துக்களை கவர்னர் கேட்டறிந்தார்.
சில மசோதாக்களை கவர்னர், அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார். 'கர்நாடக ஏரி பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு ஆணைய மசோதா'வை துணை முதல்வர் சிவகுமாருக்கு அனுப்பியுள்ளார். 'கர்நாடக கிராம மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் பல்கலை கழக திருத்த மசோதா' தொடர்பாக விளக்கம் கேட்டு, கிராம மேம்பாட்டு துறைக்கு அனுப்பியுள்ளார்.
சட்டசபை, மேல்சபையில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு இடையே, நிறைவேற்றப்பட்ட வெறுப்பு பேச்சு தடுப்பு மசோதாவிலும், கவர்னர் கையெழுத்திடவில்லை. அதற்கும் விளக்கம் கேட்டுள்ளார்.

