/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆனந்தபுரத்தில் இன்று வேலை வாய்ப்பு முகாம்
/
ஆனந்தபுரத்தில் இன்று வேலை வாய்ப்பு முகாம்
ADDED : மே 23, 2025 11:09 PM
ஆனந்தபுரம்: பெங்களூரு ஆனந்தபுரம் பகுதியில் உள்ள ஜெய் பீம் பவனில் இன்று காலை 8:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை, வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில், 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கு பெறுகின்றன; 1,000 பேருக்கு மேல் வேலைவாய்ப்பு பெறுவர்.
ஆனந்தபுரம் நிவசிகளா அபிவிருத்தி சமிதி, ஆனந்தபுரம் குடியிருப்போர் மேம்பாட்டு குழு, கே.ஜி.ஐ.எஸ்.எல்., மைக்ரோ கல்லுாரி, எக்விடாஸ் டிரஸ்ட் மற்றும் கே.எம்.ஆர்.டி., டிரஸ்ட் ஆகியோர் இணைந்து நடத்துகின்றனர்.
இதில், 8, 10, 12ம் வகுப்பு படித்தவர்கள், டிப்ளமோ, ஐ.டி.ஐ., இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர்கள், 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டோர் பங்கு பெறலாம். அனுமதி இலவசம். இந்த முகாம் குறித்து மேலும் தகவல்களை பெற விரும்புவோர் தீர்த்த பிரசாத் - 93530 30570, சச்சின் - 63636 66822 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.