/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'முடா' வழக்கில் மேல்முறையீட்டு மனு ஈ.டி., வக்கீலிடம் நீதிபதி கிடுக்கிப்பிடி
/
'முடா' வழக்கில் மேல்முறையீட்டு மனு ஈ.டி., வக்கீலிடம் நீதிபதி கிடுக்கிப்பிடி
'முடா' வழக்கில் மேல்முறையீட்டு மனு ஈ.டி., வக்கீலிடம் நீதிபதி கிடுக்கிப்பிடி
'முடா' வழக்கில் மேல்முறையீட்டு மனு ஈ.டி., வக்கீலிடம் நீதிபதி கிடுக்கிப்பிடி
ADDED : ஏப் 04, 2025 06:42 AM

பெங்களூரு: 'முடா வழக்கில் சித்தராமையாவுக்கு ஆதரவாக, லோக் ஆயுக்தா தாக்கல் செய்த 'பி' அறிக்கையை ஏற்றுக்கொண்டால், நீங்கள் என்ன செய்வீர்கள்' என்று, அமலாக்க துறை வக்கீலிடம், நீதிபதி கேள்வி எழுப்பினார்.
முடா வழக்கில் முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி உட்பட 4 பேரும் குற்றமற்றவர்கள் என்று, லோக் ஆயுக்தா தாக்கல் செய்த பி அறிக்கையை ரத்து செய்யும்படி, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில், அமலாக்கத்துறை நேற்று முன்தினம் மனு செய்தது. இந்த மனுவை நீதிபதி சந்தோஷ் கஜானா பட் நேற்று விசாரித்தார்.
அமலாக்க துறை சார்பில் ஆஜரான வக்கீல் மதுகர் தேஷ்பாண்டே வாதிடுகையில், ''முடா வழக்கில் முதல்வர் உட்பட 4 பேரும் முறைகேட்டில் ஈடுபட்டதற்கான ஆவணங்கள் எங்களிடம் உள்ளன. நாங்கள் கொடுத்த ஆவணங்களை கருத்தில் கொள்ளாமல், லோக் ஆயுக்தா போலீசார் புறக்கணித்து உள்ளனர். இதனால் பி அறிக்கையை ஏற்றுக்கொள்ள கூடாது,'' என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி சந்தோஷ் கஜானா பட், ''லோக் ஆயுக்தாவால் பி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இப்போது வந்து அறிக்கையை ரத்து செய்யும்படி கூறினால் எப்படி. ஒருவேளை அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டால் நீங்கள் செய்வீர்கள்,'' என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு வக்கீல் மதுகர் தேஷ்பாண்டே, ''உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்,'' என்றார். தொடர்ந்து நடந்த வாதங்களுக்கு பின், மனு மீதான விசாரணை நாளை ஒத்தி வைக்கப்பட்டது.
இதற்கிடையில் முதல்வரின் சட்ட ஆலோசகரான எம்.எல்.ஏ., பொன்னண்ணா டில்லியில் நேற்று கூறுகையில், ''முடா முன்னாள் கமிஷனர் நடேஷிடம் விசாரிக்க விதிக்கப்பட்ட தடையை, உயர் நீதிமன்றம் நீக்கி உள்ளது. இதனால் சித்தராமையாவுக்கு சிக்கல் என்று, சில ஊடகங்கள் தவறான தகவலை மக்களிடம் கொண்டு செல்கின்றன. நடேஷ் கொடுத்த வாக்குமூலத்தை வைத்து, முடாவின் இன்னொரு முன்னாள் கமிஷனர் தினேஷ்குமாரிடம் விசாரிக்கலாம்.
''சித்தராமையா, அவரது மனைவி பார்வதியிடம் விசாரிக்க முடியாது. பார்வதி தனது பெயரில் இருந்த 14 வீட்டுமனைகளை திரும்ப கொடுத்து விட்டார். அந்த நிலத்தை வைத்து சட்டவிரோத பணபரிமாற்றம் நடக்கவில்லை என்று, நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது. இதனால் தான், அவருக்கு அமலாக்க துறை அனுப்பிய சம்மன் ரத்து செய்யப்பட்டது,'' என்றார்.

