தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஆர்டர் செய்ததோ பிளேடு வந்ததோ பழைய துணி நீதிபதி அதிர்ச்சி

 ஆர்டர் செய்ததோ பிளேடு வந்ததோ பழைய துணி நீதிபதி அதிர்ச்சி

 ஆர்டர் செய்ததோ பிளேடு வந்ததோ பழைய துணி நீதிபதி அதிர்ச்சி


ADDED : பிப் 14, 2026 04:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2026 04:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: ஆன்லைனில் பிளேடு வாங்க ஆர்டர் செய்த நீதிபதிக்கு, பழைய துணி டெலிவரி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களிடம் இருந்து பொருட்களை வாங்கும் போது, அந்த நிறுவனங்கள் தவறான பொருட்களை அனுப்புவது, அவ்வப்போது நடந்து வருகிறது.

அதாவது, ஒரு பொருளை ஆர்டர் செய்தால், வேறு பொருள் வரும். மொபைல் போன் ஆர்டர் செய்தவருக்கு, பார்சலில் கல் வந்த சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில், பெங்களூரு உப லோக் ஆயுக்தா நீதிபதி பனீந்திரா, 'குட் மாக்ஸ்' நிறுவனத்தில், ஆன்லைன் வழியாக ரேசர் பிளேடுகள் ஆர்டர் செய்திருந்தார்.

நேற்று முன்தினம் இவரது வீட்டுக்கு பார்சல் வந்தது. அந்த பார்சல், ஷேடோபாக்ஸ் டெலிவரி நிறுவனம் மூலமாக வந்தது. பார்சலை நீதிபதி பனீந்திரா பிரித்து பார்த்த போது, ரேசர் பிளேடுகளுக்கு பதிலாக, பழைய துணிகள் இருந்தன.

இது குறித்து, சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில், நீதிபதி புகார் அளித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us