/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'முடா' வழக்கில் லோக் ஆயுக்தா விசாரணை மீது நீதிபதி அதிருப்தி
/
'முடா' வழக்கில் லோக் ஆயுக்தா விசாரணை மீது நீதிபதி அதிருப்தி
'முடா' வழக்கில் லோக் ஆயுக்தா விசாரணை மீது நீதிபதி அதிருப்தி
'முடா' வழக்கில் லோக் ஆயுக்தா விசாரணை மீது நீதிபதி அதிருப்தி
ADDED : மே 07, 2025 11:42 PM
பெங்களூரு: 'முடா' வழக்கில் வரும் 29ம் தேதி விரிவான விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய, லோக் ஆயுக்தா போலீசாருக்கு, மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
'முடா' எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் நடந்ததாக கூறப்படும் முறைகேடு புகார் பற்றி, மைசூரு லோக் ஆயுக்தா போலீசார் விசாரிக்கின்றனர்.
அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, 14 வீட்டுமனைகள் வாங்கியதாக, முதல்வர் சித்தராமையா மீது பதிவான வழக்கில், அவர் குற்றமற்றவர் என்று நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
'இந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ள கூடாது' என, சமூக ஆர்வலர் சிநேகமயி கிருஷ்ணா, அமலாக்கத்துறை சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த மாதம் 15ம் தேதி நடந்த விசாரணையின்போது, 'முடா' வழக்கில் விரிவான விசாரணை அறிக்கை தாக்கல் செய்த பின், முதல்வர் குற்றமற்றவர் என்று தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை ஏற்பதா, வேண்டாமா என முடிவு செய்வதாக, நீதிபதி சந்தோஷ் கஜனன் பட் கூறினார்.
மே 7ம் தேதி விரிவான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தார்.
நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, விரிவான விசாரணை அறிக்கையை லோக் ஆயுக்தா போலீசார் தாக்கல் செய்யவில்லை. சில ஆவணங்களை சீல் வைத்த கவரில் சமர்ப்பித்தனர்.
இந்த வழக்கில் சில அரசு அதிகாரிகள் மீது, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த அரசின் அனுமதியை எதிர்பார்த்து காத்து இருப்பதாக, லோக் ஆயுக்தா தரப்பு வக்கீல் வெங்கடேஷ் அரபட்டி, நீதிபதியிடம் கூறினார்.
இதனால் கடும் கோபம் அடைந்த நீதிபதி, ''நீங்கள் விசாரணை நடத்தும் விதம், எனக்கு திருப்தி தரவில்லை,'' என கூறி தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார். விசாரணையை வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
'அன்றைய தினம் விரிவான அறிக்கை, தாக்கல் செய்ய வேண்டும்' என, லோக் ஆயுக்தாவுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.