/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
போக்சோ வழக்கில் எடியூரப்பா மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
/
போக்சோ வழக்கில் எடியூரப்பா மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
போக்சோ வழக்கில் எடியூரப்பா மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
போக்சோ வழக்கில் எடியூரப்பா மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
ADDED : அக் 23, 2025 11:12 PM

பெங்களூரு: தன் மீது தொடரப்பட்ட 'போக்சோ' வழக்கு விசாரணையை கீழமை நீதிமன்றம் புதிதாக நடத்துவதற்கு தடை விதிக்கக் கோரி, முன்னாள் முதல்வர் எடியூரப்பா தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை, கர்நாடக உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
பெங்களூரில் தன் இல்லத்துக்கு வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சதாசிவ நகர் போலீஸ் நிலையத்தில் பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா மீது 'போக்சோ' வழக்குப் பதிவானது. பின், இவ்வழக்கு சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது.
இவ்வழக்கை ரத்து செய்யும்படி, எடியூரப்பா தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதேவேளையில், புதிதாக விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மீண்டும் எடியூரப்பா மனுத் தாக்கல் செய்திருந்தார். இம்மனு நேற்று நீதிபதி அருண் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது எடியூரப்பா தரப்பு வக்கீல் நாகேஷ் வாதிட்டதாவது:
வழக்கை புதிதாக விசாரிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணையின்போது, அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து, குற்றப்பத்திரிகை பெற்றிருக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தை தவிர, வேறு எந்த ஆதாரத்தையும், நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. எடியூரப்பாவின் வீட்டில் இருந்த சாட்சிகளின் வாக்குமூலங்களும் பரிசீலிக்கப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
அரசு தரப்பு வக்கீல் ஜெகதீஷ் வாதிட்டதாவது:
பாதிக்கப்பட்டவரின் தாய்க்கும், எடியூரப்பாவுக்கும் இடையிலான ஆடியோ பதிவு அழிக்கப்பட்டுள்ளது. குற்றம் செய்யவில்லை என்றால், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எதற்காக 2 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும். எடியூரப்பாவும், அப்பெண்ணும் பேசும் உரையாடல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. இதை, இவ்வழக்கில் தொடர்புடைய அருண் அழித்துள்ளார். ஆனாலும், உண்மையான ஆடியோ பதிவை, பாதிக்கப்பட்ட பெண்ணின் மொபைல் போனில் இருந்து போலீசார் மீட்டுள்ளனர்.
இந்த ஆடியோ தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஆய்வு அறிக்கையிலும், 'ஆடியோவில் இருப்பது எடியூரப்பாவின் குரல்' என்பதை உறுதி செய்து உள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணை, தன் அறைக்கு அழைத்துச் சென்ற எடியூரப்பா, தவறாக தொட்டுள்ளார். இதனால் அச்சுறுமி அழுது கொண்டே வெளியே வந்துள்ளார். இதை விசாரணை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அருண், ''இது ரத்து செய்யப்பட வேண்டிய வழக்கு அல்ல. மனு மீதான உண்மை அம்சங்கள் குறித்து வாய்மொழியாக விளக்கம் அளிக்கப்படும். தீர்ப்பு ஒத்திவைக்கப்படுகிறது,'' என்றார்.

