/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக விபு பக்ரு நியமனம்
/
கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக விபு பக்ரு நியமனம்
கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக விபு பக்ரு நியமனம்
கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக விபு பக்ரு நியமனம்
ADDED : ஜூலை 15, 2025 04:37 AM

பெங்களூரு:கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக விபு பக்ருவை, ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்தார்.
கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த நிலே விபின்சந்திரா அஞ்சாரியா, மே மாதம் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதனால், தலைமை நீதிபதி பொறுப்பை நீதிபதியாக காமேஸ்வர ராவ் கவனித்து வந்தார்.
இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு, கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக விபு பக்ருவை நியமித்துள்ளார். தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள விபு பக்ரு, 1966ல் நாக்பூரில் பிறந்தார். புதுடில்லியில் டில்லி பப்ளிக் பள்ளியில் படிப்பை முடித்த இவர், 1985ல் பட்டய கணக்காளர் மையத்தில் சேர்ந்தார். 1987ல் டில்லி பல்கலைக்கழகத்தில் பி.காம்., பட்டப்படிப்பு முடித்த இவர், 1989ல் பட்டய கணக்காளரானார். 1990ல் எல்.எல்.பி., பட்டம் பெற்ற இவர், டில்லி வக்கீல்கள் கவுன்சிலில் 1990ல் சேர்ந்தார்.
டில்லியில் உள்ள உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் வக்கீலாக பயிற்சி செய்தார். 2011ல் டில்லி உயர் நீதிமன்ற மூத்த வக்கீலாக நியமிக்கப்பட்டார். 2013ல் டில்லி உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர், 2015ல் நிரந்தர நீதிபதியானார். 2024ல் டில்லி உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதியாக இருந்த இவர், தற்போது கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.