/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
இயற்கை ஆர்வலர்களுக்கு பிடித்த கதம்பி நீர்வீழ்ச்சி
/
இயற்கை ஆர்வலர்களுக்கு பிடித்த கதம்பி நீர்வீழ்ச்சி
இயற்கை ஆர்வலர்களுக்கு பிடித்த கதம்பி நீர்வீழ்ச்சி
இயற்கை ஆர்வலர்களுக்கு பிடித்த கதம்பி நீர்வீழ்ச்சி
ADDED : டிச 25, 2025 07:21 AM

- நமது நிருபர் -
சிக்கமகளூரு மாவட்டம், குத்ரேமுக் தேசிய பூங்காவுக்குள் அமைந்து உள்ளது கதம்பி நீர்வீழ்ச்சி.
மேற்கு தொடர்ச்சி மலையின் பசுமைக்கு இடையில் சிருங்கேரி - குத்ரேமுக் பிரதான சாலையின் அருகில் 30 அடி உயரத்தில் இருந்து கொட்டுகிறது. இதன் அழகை, சாலையில் உள்ள பாலத்தில் நின்றபடி ரசிக்கலாம்.
நீர்வீழ்ச்சியை அருகில் சென்று பார்ப்பதை தடுக்கும் வகையில் பாலத்தின் இருபுறமும் இரும்பு தடுப்பு அமைத்து உள்ளனர். ஆனாலும் சிலர், தடுப்புகளை தாண்டி, உயிரை பணயம் வைத்து செல்கின்றனர். மழை காலங்களில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்வீழ்ச்சியை காண ஏராளமான சுற்றுலா பயணியர் வருகை தருகின்றனர்.
பாலத்தில் வாகனங்களை நிறுத்த அனுமதி இல்லை. அதனால் சிலர் பாலத்துக்கு முன்னதாக அல்லது பாலத்தை தாண்டி வாகனங்களை நிறுத்தி விட்டு, பாலத்தில் நின்றபடி, மொபைல் போனில் 'செல்பி' எடுத்து கொள்கின்றனர்.
மழை காலத்திலும், மழை காலத்துக்கு பின்னரும், அதாவது அக்டோபர் முதல் மே வரையிலான காலகட்டத்தில் கதம்பி நீர்வீழ்ச்சியை காணலாம்.
இந்த நீர்வீழ்ச்சியின் அழகை ரசிக்க, சுற்றுலா பயணியர் குத்ரேமுக்கில் தங்கலாம். அங்கு மாநில அரசு சார்பில் காட்டேஜ்கள், கூடாரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இருப்பினும் குதிரேமுக் தேசிய பூங்காவிற்குள் முகாமிட அனுமதியில்லை.
இங்கு சிற்றுண்டி கடைகள் மட்டுமே உள்ளன. எனவே, இங்கு செல்பவர்கள் கையோடு உணவை எடுத்து செல்வது நல்லது.

