sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

ரூ.1.31 கோடி நகைகளுடன் ஓட்டம் வேலைக்கு சேர்ந்த ஏழாவது நாளில் கைவரிசை

/

ரூ.1.31 கோடி நகைகளுடன் ஓட்டம் வேலைக்கு சேர்ந்த ஏழாவது நாளில் கைவரிசை

ரூ.1.31 கோடி நகைகளுடன் ஓட்டம் வேலைக்கு சேர்ந்த ஏழாவது நாளில் கைவரிசை

ரூ.1.31 கோடி நகைகளுடன் ஓட்டம் வேலைக்கு சேர்ந்த ஏழாவது நாளில் கைவரிசை


ADDED : அக் 16, 2025 11:16 PM

Google News

ADDED : அக் 16, 2025 11:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தங்கவயல்: ராபர்ட்சன்பேட்டை கீதா சாலையில் உள்ள நகைக் கடையில் 1.31 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.93 கிலோ தங்க நகைகளை திருடிக்கொண்டு, அங்கு வேலை செய்த நபர் தலைமறைவாகிவிட்டார்.

ராபர்ட்சன்பேட்டை கீதா சாலையில் 'பி பஸ்திமல் போரா' ஜுவல்லரி என்ற தங்க நகைக் கடை உள்ளது.

இந்த கடையின் உரிமையாளர் வினோத் குமார் வீட்டில், 2019 முதல் ராஜஸ்தானை சேர்ந்த சுரேந்திரா, 35, என்பவர், வேலை செய்து வந்தார். 2020ல் வேலையிலிருந்து நின்றுவிட்டார்.

இம்மாதம் 9ம் தேதி கடை உரிமையாளர் வினோத் குமாரை செல்போனில் சுரேந்திரா தொடர்புக் கொண்டார். 'ராஜஸ்தானை சேர்ந்த யஷ், 28, என்பவர், வேலைத் தேடி தங்கவயலுக்கு வந்துள்ளார். அவர் நல்லவர்; விசுவாசமாக வேலை செய்வார்' என கூறியுள்ளார்.

இதை வினோத் குமாரும் நம்பியுள்ளார். இம்மாதம் 9ம் தேதி, சுரேந்திராவே, யஷ்ஷை அழைத்து வந்து வேலைக்கு சேர்த்துள்ளார். தீபாவளி நெருங்குவதை முன்னிட்டு, நேற்று முன்தினம் கடையை சுத்தம் செய்யும் வேலை நடந்தது. வினோத் குமார் வெளியே சென்றிருந்தார்.

திரும்பி வந்தபோது, கடையில் யஷ்ஷை காணவில்லை. அவர் மொபைல் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. கடையில் வைக்கப்பட்டிருந்த நகைப்பெட்டியையும் காணவில்லை.

உடனடியாக கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்துள்ளார். அதில், நகை பெட்டியை எடுத்துக்கொண்டு யஷ் வெளியேறும் காட்சி பதிவாகி இருந்தது.

உடனடியாக கடை உரிமையாளர் வினோத் குமார், ராபர்ட்சன்பேட்டை போலீஸ் நிலையத்தில் யஷ் மீதும், அவரை வேலைக்கு சேர்த்த சுரேந்திரா மீதும் புகார் செய்தார்.

புகாரில், 'நகை பெட்டியில், இருந்த ஒரு கோடியே 31 லட்சத்து 68 ஆயிரத்து 800 ரூபாய் மதிப்புள்ள நெக்லஸ், மாலை, செயின், உட்பட 1.93 கிலோ தங்க நகைகள் திருட்டு போயுள்ளது' என குறிப்பிட்டுள்ளார்.

இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். வேலைக்கு சேர்ந்த ஏழாம் நாளான 15ம் தேதி இரவு 7:50 மணிக்கு இச்சம்பவம் நடந்துள்ளது.






      Dinamalar
      Follow us