தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/கலாம் பயன்படுத்திய கார், பேனா அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு

கலாம் பயன்படுத்திய கார், பேனா அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு

கலாம் பயன்படுத்திய கார், பேனா அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு


UPDATED : நவ 27, 2026 12:00 AM

ADDED : நவ 26, 2026 08:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 27, 2026 12:00 AM ADDED : நவ 26, 2026 08:42 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மங்களூரு: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பயன்படுத்திய பேனாவும், அவர் பயணித்த, ‘டாடா நானோ’ காரும், தர்மஸ்தலாவின் ‘மஞ்சூஷா’ அருங்காட்சியகத்தில் சேர்க்கப்பட்டன.

தட்சிண கன்னடா மாவட்டத்தின், தர்மஸ்தலாவின் தர்மாதிகாரி வீரேந்திர ஹெக்டேவின், 79வது பிறந்த நாளையொட்டி, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பயணித்த காரும், பயன்படுத்திய பேனாவும், தர்மஸ்தலாவின், பிரசித்தி பெற்ற மஞ்சூஷா அருங்காட்சியகத்துக்கு நேற்று முன்தினம் ஒப்படைக்கப்பட்டன.

இதுகுறித்து, வீரேந்திர ஹெக்டே கூறியதாவது:

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், மிகவும் எளிமையானவர். கடவுள் மீது அவருக்கு அதிகமான நம்பிக்கை இருந்தது.

மத ஒற்றுமைக்கு முக்கியத்துவம் அளித்தார். மாணவர்களுடன் அன்போடு பழகினார். அவரது இத்தகைய நற்பண்புகள் மறக்க முடியாதவை.

அப்துல் கலாம் பயன்படுத்திய, அபூர்வமான பொருட்களை தர்மஸ்தலாவின் அருங்காட்சியகத்துக்கு அளித்த, அவரின் அறக்கட்டளைக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us