UPDATED : நவ 27, 2026 12:00 AM
ADDED : நவ 26, 2026 08:42 PM
அ நிறம் | அளவு
தார்வாட்: சட்ட கல்லுாரியில் இறுதியாண்டு படித்த மாணவர், மாரடைப்பால் உயிரிழந்தார்.
தார்வாட் நகரில் வசிப்ப வர் மூத்த வக்கீல் அனுாப் தேஷ்பாண்டே.
இவர் கூட்டுறவு சங்கங்களின் வழக்குகளை நடத்துகிறார். இவரது மகன் சமர்த், 22. இவர் சட்ட கல்லுாரியில் இறுதியாண்டு படித்தார். இந்நிலையில் இவருக்கு, நேற்று அதிகாலை
யில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் சமர்த் உயிரிழந்தார்.
சமீப நாட்களாக பள்ளி, கல்லுாரியில் படிக்கும் இளம் வயதினர் திடீர் மாரடைப்பால் இறக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. இத்தகைய சம்பவங்களை கட்டுப்படுத்த முடியாமல், சுகாதாரத்துறை அதிகாரிகள் திணறுகின்றனர்.
