தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/சாப்பிட்டு துாங்கினால் வளர்ச்சி வருமா? அமைச்சர் லட்சுமண் சவதி கேள்வி

சாப்பிட்டு துாங்கினால் வளர்ச்சி வருமா? அமைச்சர் லட்சுமண் சவதி கேள்வி

சாப்பிட்டு துாங்கினால் வளர்ச்சி வருமா? அமைச்சர் லட்சுமண் சவதி கேள்வி


UPDATED : நவ 27, 2026 12:00 AM

ADDED : நவ 26, 2026 08:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 27, 2026 12:00 AM ADDED : நவ 26, 2026 08:40 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொப்பால்: ‘‘உணவு சாப்பிட்டு விட்டு, 18 மணி நேரம் துாங்கினால், வட மாவட்டங்கள், வளர்ச்சி அடைந்து விடுமா, என, கூட்டுறவு துறை அமைச்சர் லட்சுமண் சவதி கேள்வி எழுப்பியுள்ளார்.

கொப்பாலில் நேற்று அவர் அளித்த பேட்டி:

வட கர்நாடகா தனி மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என, பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இது அவர்களின் தனிப்பட்ட கருத்து. தனி மாநிலம் வேண்டும் என்பது, பொதுமக்களின் விருப்பம் அல்ல.

கர்நாடகாவின் தென் மாவட்டங்களுடன் ஒப்பிட்டால், வட மாவட்டங்கள் வளர்ச்சி அடையவில்லை என, தனி மாநிலம் கேட்போர் கூறுகின்றனர்.

வட மாவட்டங்கள் வளர்ச்சியில், பின் தங்கியிருப்பதற்கு இப்பகுதிகளின் மக்கள் பிரதிநிதிகளுக்குள் ஒருங்கிணைப்பு, ஆர்வம் இல்லாததே காரணம். நன்றாக சாப்பிட்டு விட்டு, 18 மணி நேரம் துாங்கினால், வட மாவட்டங்கள் வளர்ச்சி அடைந்து விடுமா...

நமது கோரிக்கைகளை நிறைவேற்றி கொள்ள, இப்பகுதியின் மக்கள் பிரதிநிதிகள் ஒன்றாக சேர்ந்து, போராட்டம் நடத்த வேண்டும்.

ஆனால் அதை அவர்கள் செய்யவில்லை. வட மாவட்டங்களின் அரசியல்வாதிகளால், இப்பகுதி பின் தங்கியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us