தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/காலேன அக்ரஹாரா தாவரகெரே மெட்ரோ இயக்கம் தேதி மாற்றம்

காலேன அக்ரஹாரா தாவரகெரே மெட்ரோ இயக்கம் தேதி மாற்றம்

காலேன அக்ரஹாரா தாவரகெரே மெட்ரோ இயக்கம் தேதி மாற்றம்


UPDATED : நவ 03, 2026 12:11 AM

ADDED : நவ 03, 2026 12:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 03, 2026 12:11 AM ADDED : நவ 03, 2026 12:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: காலேன அக்ரஹாரா – தாவரகெரே இடையே, மெட்ரோ ரயில் சேவை துவங்கும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரின் தெற்கு பகுதியில் உள்ள காலேன அக்ரஹாராவில் இருந்து, வடக்கு பகுதியில் உள்ள நாகவாரா வரை 21.25 கி.மீ., துாரத்திற்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டது. இதில் முதற்கட்டமாக காலேன அக்ரஹாராவில் இருந்து 7.50 கி.மீ., துாரத்தில் உள்ள தாவரகெரே வரை சிக்னலிங் அமைப்பு உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிந்துள்ளன. ரயில்வே பாதுகாப்பு கமிஷனரும் ஆய்வு செய்து, ரயில் இயக்க அனுமதி அளித்தார்.

காலேன அக்ரஹாரா – தாவரகெரே மெட்ரோ ரயில் சேவையை, பிரதமர் நரேந்திர மோடி, நவம்பர் 15ம் தேதி துவக்கி வைப்பார் என்று, முதல்வர் சிவகுமார் கடந்த மாதம் 27ம் தேதி அறிவித்து இருந்தார்.

இந்நிலையில் பெங்களூரு தெற்கு பா.ஜ., – எம்.பி., தேஜஸ்வி சூர்யா நேற்று தனது ‘எக்ஸ்’ வலை தள பக்கத்தில், ‘காலேன அக்ரஹாரா – தாவரகெரே மெட்ரோ ரயில் சேவை நவம்பர் 13ல் துவங்கும்’ என பதிவிட்டிருந்தார். இதன்மூலம் மெட்ரோ சேவை துவக்க தேதி மாற்றப்பட்டது தெரிய வந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us