/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வாழும் கலை மையத்துக்கு காஞ்சி மடாதிபதி வருகை
/
வாழும் கலை மையத்துக்கு காஞ்சி மடாதிபதி வருகை
ADDED : ஜூன் 15, 2025 03:51 AM

பெங்களூரு: பெங்களூரு கனகபுரா சாலை உதயபுராவில் உள்ள வாழும் கலை மையத்துக்கு, நேற்று முன்தினம் ஸ்ரீகாஞ்சி மடத்தின் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வருகை தந்தார். அவருக்கு பூர்ணகும்ப மரியாதை வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின், வேத ஆகம சமஸ்கிருத மஹா பாடசாலை வேத விஞ்ஞான மஹா வித்யா பீடத்தின் முதல்வர் சுந்தரமூர்த்தி சிவம், வேதாகம ஆசிரியர்கள், மாணவர்கள் வரவேற்றனர்.
தொடர்ந்து தியான மந்திரத்தில் இருந்த பக்தர்களுக்கு, ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீஸ்ரீரவிசங்கர் குருஜி ஆசி வழங்கினர். அதன் பின், கோசாலைக்கு சென்ற சுவாமிகள், பசுக்களுக்கு தரிசனம் செய்தனர்.
மஹா கணபதியை தரிசனம் செய்துவிட்டு, தேவி மண்டபத்திற்கு சென்றார். அங்கு, ஸ்ரீபுவனேஸ்வரி அம்பிகைக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சுவாமிகளுக்கு வேத விஞ்ஞான மஹா வித்யா பீடத்தின் சார்பிலும், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜி சார்பிலும் சுவாகத பத்ரம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கவுரவ ஆலோசகர் நரசிம்மன், தலைவர் பானுமதி, ஆசிரம நிர்வாகிகள், வேதாகம ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.