தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கன்னட உகாதி, ரம்ஜான் பண்டிகை கூடுதலாக 2,000 பஸ்கள் இயக்கம்

 கன்னட உகாதி, ரம்ஜான் பண்டிகை கூடுதலாக 2,000 பஸ்கள் இயக்கம்

 கன்னட உகாதி, ரம்ஜான் பண்டிகை கூடுதலாக 2,000 பஸ்கள் இயக்கம்


ADDED : மார் 16, 2026 07:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 16, 2026 07:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: 'கன்னட உகாதி, ரம்ஜான் பண்டிகையை ஒட்டி, கூடுதலாக 2,000 பஸ்கள் இயக்கப்படுகின்றன' என கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாகம் அறிவித்து உள்ளது.

இது தொடர்பான அறிக்கை:

கன்னட உகாதிக்காக மார்ச் 18, 19ம் தேதிகளிலும்; ரம்ஜான் பண்டிகைக்காக மார்ச் 20, 21ம் தேதிகளிலும் பெங்களூரில் இருந்து மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும்; மார்ச் 22ம் தேதி, வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து பெங்களூருக்கும் கூடுதலாக, 2000 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

பெங்களூரு கெம்பே கவுடா பஸ் நிலையத்தில் இருந்து தர்மஸ்தலா, குக்கே சுப்பிரமண்யா, ஷிவமொக்கா, ஹாசன், மங்களூரு, குந்தாபூர், சிருங்கேரி, ஹொரநாடு, தாவணகெரே, ஹூப்பள்ளி, தார்வாட், பெலகாவி, விஜயபுரா, கோகர்ணா, சிர்சி, கார்வார், ராய்ச்சூர், கலபுரகி, பல்லாரி, கொப்பால், யாத்கிர், பீதர், திருப்பதி, விஜயவாடா, ஹைதராபாத் உட்பட பல இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

மைசூரு சாட்டிலைட் பஸ் நிலையத்தில் இருந்து மைசூரு, ஹூன்சூர், பிரியாபட்டணா, விராஜ்பேட், குஷால் நகர், மடிகேரிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. சிறப்பு பஸ்களில், www.ksrtc.karnataka.gov.in என்ற இணையளத்தில் சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம்.

கர்நாடகா மட்டுமின்றி, அண்டை மாநிலங்களான தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கேரளா, புதுச்சேரி, மஹாராஷ்டிரா, கோவாவில் உள்ள கே.எஸ்.ஆர்.டி.சி., கவுன்டர்களிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

நான்கு அல்லது அதற்கு மேல் ஒரே நேரத்தில் செல்வதற்கு மட்டும், டிக்கெட் விலையில் ஐந்து சதவீதமும்; சென்று வர முன்பதிவு செய்தால், 10 சதவீதம் தள்ளுபடியும் கிடைக்கும்.

டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே, எங்கிருந்து ஏற வேண்டும் என்பதை குறிப்பிட வேண்டும். அதுபோன்று மாநிலத்தின் அனைத்து தாலுகாக்கள், மாவட்ட பஸ் நிலையங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us