தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கன்னடம், தெலுங்கு வருட பிறப்பு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

 கன்னடம், தெலுங்கு வருட பிறப்பு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

 கன்னடம், தெலுங்கு வருட பிறப்பு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு


ADDED : மார் 14, 2026 06:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2026 06:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: கன்னடம் மற்றும் தெலுங்கு வருட பிறப்பை ஒட்டி, பெங்களூரு மற்றம் யஷ்வந்த்பூரில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

தெற்கு ரயில்வே அறிக்கை:

 ரயில் எண் 06503: எஸ்.எம்.வி.டி., பெங்களூரு - பெலகாவி சிறப்பு ரயில், எஸ்.எம்.வி.டி., பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து வரும், 18ம் தேதி இரவு 7:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7:35க்கு பெலகாவி சென்றடையும்.

மறு மார்க்கத்தில் எண் 06504: பெலகாவி - எஸ்.எம்.வி.டி., பெங்களூரு சிறப்பு ரயில், பெலகாவியில் இருந்து, 22ம் தேதி மாலை 5:30க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 5:00 மணிக்கு எஸ்.எம்.வி.டி., வந்தடையும்.

 எண் 06277: யஷ்வந்த்பூர் - விஜயபுரா சிறப்பு ரயில், யஷ்வந்த்பூரில் இருந்து, 18ம் தேதி இரவு 9:50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9:45க்கு விஜயபுரா சென்றடையும்.

மறுமார்க்கத்தில் எண் 06278: விஜயபுரா - யஷ்வந்த்பூர் சிறப்பு ரயில், விஜயபுராவில் இருந்து, 22ம் தேதி மதியம் 1:30க்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 12:30 மணிக்கு யஷ்வந்த்பூர் வந்தடையும்.

 எண் 07379: எஸ்.எஸ்.எஸ்., ஹூப்பள்ளி - யஷ்வந்த்பூர் சிறப்பு ரயில், எஸ்.எஸ்.எஸ்., ஹூப்பள்ளியில் இருந்து மதியம், 12:00க்கு புறப்பட்டு, அன்று இரவு 8:15 மணிக்கு யஷ்வந்த்பூர் வந்தடையும்.

 எண் 06267: யஷ்வந்த்பூர் - கோவாவின் மத்கான் சிறப்பு ரயில், யஷ்வந்த்பூரில் இருந்து, 18ம் தேதி மதியம், 12:00க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6:45 மணிக்கு கோவா சென்றடையும்.

மறுமார்க்கத்தில் எண் 06268: மத்கான் - யஷ்வந்த்பூர் சிறப்பு ரயில், மத்கானில் இருந்து, 19ம் தேதி காலை, 11:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 5:20க்கு பெங்களூரு கன்டோன்மென்ட் வந்தடையும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us