/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தமிழகத்தை பின்பற்றி இருமொழி கொள்கை அரசுக்கு கன்னட எழுத்தாளர்கள் வலியுறுத்தல்
/
தமிழகத்தை பின்பற்றி இருமொழி கொள்கை அரசுக்கு கன்னட எழுத்தாளர்கள் வலியுறுத்தல்
தமிழகத்தை பின்பற்றி இருமொழி கொள்கை அரசுக்கு கன்னட எழுத்தாளர்கள் வலியுறுத்தல்
தமிழகத்தை பின்பற்றி இருமொழி கொள்கை அரசுக்கு கன்னட எழுத்தாளர்கள் வலியுறுத்தல்
ADDED : அக் 30, 2025 04:47 AM

பெங்களூரு: 'தமிழகம் போன்று, 2026 - 27 கல்வியாண்டு முதல், கல்வியில் இருமொழிக் கொள்கையை கர்நாடகாவும் அமல்படுத்த வேண்டும்' என, கன்னட எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு காந்தி பவனில், பனவாசி பாலகா ஏற்பாடு செய்திருந்த, 'மும்மொழி கொள்கை போதாது: இருமொழிக் கற்றல் தேவை' என்ற கருத்தரங்கு நடந்தது.
இதில் பங்கேற்ற கன்னட மேம்பாட்டு ஆணைய தலைவர் புருஷோத்தம் பிலிமலே பேசுகையில், ''மொழிக் கொள்கையும், மாநில கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாகும். ஏற்கனவே அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இரு மொழிக் கல்வி முறையை அமல்படுத்த அரசுக்கு அழுத்தம் கொடுக்க, உயர்மட்ட குழு அமைக்கப்பட வேண்டும்,'' என்றார்.
கன்னட மேம்பாட்டு ஆணைய முன்னாள் தலைவர் எஸ்.ஜி.சித்தராமையா பேசியதாவது:
மூன்று மொழி சூத்திரம், நமக்கு திரிசூலம் போன்றது என்று குவெம்பு எச்சரித்திருந்தார். தமிழகம் போன்று நமக்கும் இருமொழிக் கொள்கையை அமல்படுத்த அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.
மத்திய அரசின் தலையீடு இல்லாமல், மாநில அரசு இந்த முடிவை அமைச்சரவையில் விவாதிக்க வேண்டும். கல்வி நிறுவனங்களை நடத்தும் அமைச்சர்கள், அரசியல் தலைவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நாவலாசிரியர் குமுறன் வீரபத்ரப்பா பேசுகையில், ''தமிழக அரசு, கேந்திரிய மற்றும் நவோதயா பள்ளிகளை அனுமதிக்கவில்லை. இரு மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது.
நம் மாநில அரசியல் தலைவர்களுக்கு கூட மொழியின் மீது மரியாதை இல்லை. இது இன்னும் கோரிக்கையாகவே உள்ளது. ஆந்திரா, தெலுங்கானா கல்வி துறைக்கு செலவிடப்படும் நிதியின் அளவும் அதிகரித்துள்ளது. இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்,'' என்றார்.
இலக்கிய அறிஞர் அக்ரஹாரா கிருஷ்ணமூர்த்தி, முக்கிய மந்திரி சந்துரு, இசையமைப்பாளர் ஹம்சலேகா மற்றும் பல கன்னட எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்துக்கு பின், முதல்வர் சித்தராமையாவை சந்தித்து, கல்வியில் இரு மொழிக் கொள்கையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டனர். முதல்வரும், அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து முடிவெடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

