/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கர்நாடக வங்கியின் புதிய நிர்வாக இயக்குநர் தேர்வு
/
கர்நாடக வங்கியின் புதிய நிர்வாக இயக்குநர் தேர்வு
ADDED : ஜூலை 15, 2025 04:38 AM

பெங்களூரு: கர்நாடக வங்கியின் இடைக்கால நிர்வாக இயக்குநராக, வங்கியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு பொறுப்புகளில் பணிபுரிந்து வந்த ராகவேந்திரா ஸ்ரீனிவாஸ் பட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பதவியிலிருந்து ஸ்ரீகிருஷ்ணன் ஹரி ஹர சர்மா கடந்த மாதம் 29ம் தேதி ராஜினாமா செய்தார். மிகப்பெரிய பொறுப்பில் இருந்த அதிகாரி, திடீரென ராஜினாமா செய்தது, பரபரப்பு ஏற்பட்டது. இது வங்கியின் பங்கு சந்தையிலும் எதிரொலித்தது. வங்கியின் பங்குகள் சரிந்தன.
இதனால், உடனடியாக புதிய நிர்வாக இயக்குநரை நியமிக்கும் பணிகள் நடந்தன. இடைக்கால நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக ராகவேந்திரா ஸ்ரீனிவாஸ் பட் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், நாளை பதவியேற்கிறார். அடுத்த மூன்று மாதங்களுக்கு பதவியில் நீடிப்பார் என வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், ''1981ல் கர்நாடக வங்கியில் கிளர்க்காக பணிக்கு சேர்ந்தேன். 44 ஆண்டுகளாக பணி செய்து வருகிறேன். பல பதவிகளில் பணிபுரிந்துள்ளேன். பல ஆண்டுகளாக வங்கி பெற்றுள்ள நம்பிக்கையை காப்பாற்றுவேன். அனைவருடனும் இணைந்து பணியாற்றுவேன்,'' என்றார்.