/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கர்நாடக பாரத் கவுர் காசி தரிசனம் செப்., 21 முதல் 9 நாள் சுற்றுலா
/
கர்நாடக பாரத் கவுர் காசி தரிசனம் செப்., 21 முதல் 9 நாள் சுற்றுலா
கர்நாடக பாரத் கவுர் காசி தரிசனம் செப்., 21 முதல் 9 நாள் சுற்றுலா
கர்நாடக பாரத் கவுர் காசி தரிசனம் செப்., 21 முதல் 9 நாள் சுற்றுலா
ADDED : ஆக 21, 2025 11:00 PM
பெங்களூரு: கர்நாடக மாநில ஹிந்து அறநிலைய துறை மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி., இணைந்து செப்., 21 முதல் 29 வரை ஒன்பது நாள் கர்நாடக பாரத் கவுர் காசி தரிசனம் என்ற சுற்றுலா திட்டத்தை அறிவித்துள்ளது.
கர்நாடக ஹிந்து அறநிலைய துறையும், ஐ.ஆர்.சி.டி.சி., எனும் இந்திய ரயில்வே கேட்டரிங் சுற்றுலா வாரியம் இணைந்து கர்நாடக பாரத் கவுர் ரயில் சேவை நடத்தி வருகிறது.
அடுத்த மாதம் செப்., 21 முதல் 29ம் தேதி வரை ஒன்பது நாள், 'கர்நாடக பாரத் கவுரவ் காசி தரிசனம்' என்ற சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் பயணம் செய்ய ஒருவருக்கு 22,500 ரூபாய் கட்டணம். இதில், 7,500 ரூபாய், மாநில அரசு மானியமாக வழங்குகிறது.
எஸ்.எம்.வி.டி., பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில், துமகூரு, பிரூர், தாவணகெரே, ஹாவேரி, ஹூப்பள்ளி, பெலகாவி ஆகிய ரயில் நிலையங்களில் நிற்கும்.
பெங்களூரில் இருந்து புறப்படும் ரயில் வாரணாசியில் துளசி மனாஸ் கோவில், சங்கட் மோசன் ஹனுமன் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், கங்கா ஆரத்தி, அயோத்தி ராம்ஜென்ம பூமி கோவில்; கயாவில் விஷ்ணுபத் கோவில், மஹாபூதி கோவில்; பிரயாக்ராஜில் ஹனுமன் கோவில், கங்கையில் புனித நீராடலாம். அதன்பின் பெங்களூரு வந்தடையும்.
மேலும் விபரங்களுக்கு பெங்களூருக்கு 90031 41707, 85959 31290, 85959 31291; மைசூருக்கு 85959 31294; ஹூப்பள்ளிக்கு 85959 31293 என்ற மொபைல் போனிலும்; www.irctctourism.com என்ற இணையதளத்திலும் தொடர்பு கொள்ளலாம்.