/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கர்நாடக பா.ஜ., தலைவர் மாற்றம்? எதிர்க்கட்சி தலைவர் அசோக் சூசகம்
/
கர்நாடக பா.ஜ., தலைவர் மாற்றம்? எதிர்க்கட்சி தலைவர் அசோக் சூசகம்
கர்நாடக பா.ஜ., தலைவர் மாற்றம்? எதிர்க்கட்சி தலைவர் அசோக் சூசகம்
கர்நாடக பா.ஜ., தலைவர் மாற்றம்? எதிர்க்கட்சி தலைவர் அசோக் சூசகம்
ADDED : ஆக 08, 2025 04:06 AM

'தேசிய பா.ஜ., தலைவர் மாற்றத்துக்கு பின், கர்நாடக மாநில தலைவர் மாற்றப்படலாம். கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு, நாங்கள் கட்டுப்படுவோம்,'' என, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக் தெரிவித்தார்.
புதுடில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக் நேற்று சந்தித்தார். பின், அவர் அளித்த பேட்டி:
கர்நாடகாவில் சமீபத்தில் நடந்த அரசியல் முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஊழல் மற்றும் மக்கள் விரோத காங்கிரஸ் அரசுக்கு எதிராக, கர்நாடக பா.ஜ., நடத்தி வரும் தொடர் போராட்டம் குறித்து விளக்கினேன்.
மாநில பா.ஜ., தலைவர் மாற்றம் குறித்து அவரும், கேட்கவில்லை; நானும் கேட்கவில்லை. அநேகமாக, தேசிய பா.ஜ., தலைவர் மாற்றத்துக்கு பின், மாநில தலைவர் மாற்றப்படலாம். கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்.
சிக்கபல்லாபூர் கிராம பஞ்சாயத்து அதிகாரியின் கார் ஓட்டுநர் தற்கொலை கடிதத்தில், எம்.பி., சுதாகர் பெயர் குறிப்பிட்டிருப்பது குறித்து எனக்கு தெரியாது. மேலும், சுதாகர் எம்.பி.,யாக இருக்கும்போது, மாநில அரசின் நிர்வாகத்தில் அவர் எப்படி தலையிட முடியும்?
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -