தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ '5 மாநில தேர்தல் முடிவுகளுக்கு பின் கர்நாடக அமைச்சரவையில் மாற்றம்'

 '5 மாநில தேர்தல் முடிவுகளுக்கு பின் கர்நாடக அமைச்சரவையில் மாற்றம்'

 '5 மாநில தேர்தல் முடிவுகளுக்கு பின் கர்நாடக அமைச்சரவையில் மாற்றம்'


ADDED : மார் 17, 2026 06:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 17, 2026 06:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விஜயபுரா: ''ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியான பின், கர்நாடக அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும்,'' என, மாநில காங்கிரஸ் செயல் தலைவர் சலீம் அகமது கூறினார்.

ஹாவேரியில் நேற்று அவர் அளித்த பேட்டி:

தமிழகம், கேரளா உட்பட ஐந்து மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் வெளியான பின், கர்நாடக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும். தற்போது உள்ள அமைச்சர்களில், 50 சதவீதம் பேரை நீக்கி விட்டு, கட்சியை வலுப்படுத்த புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்க மேலிடம் உத்தரவிட்டுள்ளது. முதல்வர் மாற்றம் குறித்து நாங்கள் யாரும் பேச மாட்டோம். அது, மேலிடத்தின் முடிவுக்கு உட்பட்ட விவகாரம்.

கடந்த, 2023 சட்டசபை தேர்தலில், காங்கிரசை ஆட்சிக்கு கொண்டு வந்ததில், கட்சியின் செயல் தலைவரான எனக்கும் பங்கு உள்ளது. என்னுடன் செயல் தலைவர்களாக இருந்த சதீஷ் ஜார்கிஹோளி, ஈஸ்வர் கன்ட்ரே அமைச்சர்களாகி விட்டனர். அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, எனக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us