தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கர்நாடக அமைச்சரவை விரைவில் மாற்றம்: காங்., - எம்.எல்.ஏ., நாராயணசாமி ஆரூடம்

 கர்நாடக அமைச்சரவை விரைவில் மாற்றம்: காங்., - எம்.எல்.ஏ., நாராயணசாமி ஆரூடம்

 கர்நாடக அமைச்சரவை விரைவில் மாற்றம்: காங்., - எம்.எல்.ஏ., நாராயணசாமி ஆரூடம்


ADDED : மே 24, 2026 11:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 24, 2026 11:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோலார்: ''இம்மாதத்திற்குள் மாநில அமைச்சரவை விரிவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 15 அமைச்சர்களை நீக்கப்பட்டு, புதியவர்களை நியமிக்கப்படுவர் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்கு, கட்சியி ன் மேலிடம் சாதகமாக பதிலை அளித்துள்ளது' என, பங்கார்பேட்டை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., நாராயணசாமி தெரிவித்தார்.

கோலாரில் நேற்று செய்தியாளரிடம் அவர் அளித்த பேட்டி:

கர்நாடக அரசு இரண்டரை ஆண்டுகளை நிறைவு செய்த பிறகு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று கட்சி மேலிடம் கூறியிருந்தது. ஆனால், தற்போது மூன்று ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், ஆட்சி மாற்றம் இந்த மாதத்திற்குள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து விவாதிப்பதற்காக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆகியோர், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், பொதுச்செயலர்கள் வேணுகோபால், சுர்ஜேவாலா ஆகியோரை சந்திப்பர்.

நாங்கள் மே 29ம் தேதிக்கு பிறகு டில்லிக்கு செல்ல இருக்கிறோம். கர்நாடக மாநிலத்தில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை என்ற பா.ஜ.,வின் குற்றச்சாட்டு அபத்தமானது. ஐந்து உத்தரவாத திட்டங்களை தவிர, கடந்த மூன்று ஆண்டுகளில், மாநிலத்தில் ஏராளமான வளர்ச்சி பணிகள் நடந்துள்ளன.

மத்தியில் ஆளும் பா.ஜ., வெறும் தந்திரங்களை செய்து தான், ஆட்சி நடத்தி வருகிறது. இந்த வாரம் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மூன்று முறை உயர்த்தி உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us