UPDATED : நவ 16, 2026 12:00 AM
ADDED : நவ 15, 2026 07:52 PM
பெங்களூரு: வரும் ஜனவரியில், ஓவிய சந்தை நடத்த கர்நாடக சித்ரகலா பரிஷத் தயாராகி வருகிறது.
கர்நாடக சித்ரகலா பரிஷத் துணைத் தலைவர் அப்பாஜய்யா, நேற்று அளித்த பேட்டி:
அதி நவீனமாகும் உலகில் நமது மண்ணின் சம்பிரதாயம் மறைந்து போகிறது. பல கலைகள் அழிவின் எல்லையில் உள்ளன. இத்தகைய கலைகளை பாதுகாத்து, அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டும்.
பெங்களூரின் குமாரகிருபா சாலையில், ஜனவரி 3ம் தேதியன்று ஓவிய சந்தை நடத்த முடிவு செய்துள்ளோம். அனைவரும் ஆலோசனை நடத்தி, தேதி முடிவு செய்யப்படும். ஒரு நாள் மட்டுமே நடக்கும் ஓவிய சந்தையில், இம்முறையும் லட்சக்கணக்கானோர் பங்கேற்பர் என, எதிர்பார்க்கிறோம்.
கலைஞர்களின் வசதிக்காக 1,200 முதல், 1,300க்கும் மேற்பட்ட கடைகள் திறக்கப்படும். ஏற்கனவே நாட்டின் பல்வேறு மாநிலங்களின் கலைஞர்கள், தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர்.
வழக்கம் போல, இம்முறையும், ஓவிய சந்தையில் லட்சக்கணக்கான ரூபாய் வர்த்தகம் நடக்கும் வாய்ப்புள்ளது. இந்த ஓவிய சந்தை கலைஞர்களுக்கும், கலை ஆர்வலர்களுக்கும் இடையே பாலமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
