தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ விமானப்படை தளங்களை சுற்றியுள்ள பகுதிகளில் கட்டுமான விதிகளை தளர்த்த கர்நாடகா கோரிக்கை

 விமானப்படை தளங்களை சுற்றியுள்ள பகுதிகளில் கட்டுமான விதிகளை தளர்த்த கர்நாடகா கோரிக்கை

 விமானப்படை தளங்களை சுற்றியுள்ள பகுதிகளில் கட்டுமான விதிகளை தளர்த்த கர்நாடகா கோரிக்கை

2


ADDED : செப் 29, 2026 03:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 03:48 AM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

'விமானப்படை தளங்களை சுற்றியுள்ள பகுதிகளில், கட்டட கட்டுமான விதிகளை தளர்த்த வேண்டும்' என்று, ராணுவ துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், கர்நாடக முதல்வர் சிவகுமார் கோரிக்கை வைத்துள்ளார்.

முதல்வர் சிவகுமார் இரண்டு நாட்கள் பயணமாக நேற்று டில்லி சென்றார். அங்கு ராணுவ துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்தார். அவரிடம் 7 அம்ச கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை வழங்கினார்.

அம்சங்கள் விபரம்:

பெங்களூரு இப்பலுாரில் துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தின் அருகில், ராணுவ துறைக்கு சொந்தமான 730 ஏக்கர் நிலத்தில் பூங்கா அமைத்து பசுமை மண்டலமாக மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது

பெங்களூரில் ராணுவ துறைக்கு உட்பட்ட 43.838 ஏக்கர் நிலத்தில், பருவமழையின் போது குடிசை பகுதிகளில் ஏற்படும் பிரச்னைகளை சரிசெய்யும் வகையில், அவசர சீரமைப்பு, மேம்பாட்டு பணிகள் செய்ய அனுமதி தர வேண்டும்

எச்.ஏ.எல்., மற்றும் எலஹங்கா விமானப்படை தளங்களை சுற்றி 20 கி.மீ., துாரத்தில் உள்ள பகுதிகளில் உயரமான கட்டடங்கள் கட்ட கட்டுப்பாடு உள்ளது. இதற்கான விதிகளில் சில தளர்வுகள் செய்ய வேண்டும்

அகரா - சர்ஜாபூர் இடையில் சாலை விரிவாக்க பணிக்காக, ராணுவ துறைக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை பயன்படுத்த அனுமதி தேவை

ஹெப்பால் - சென்ட்ரல் சில்க் போர்டு சுரங்க பாதை பணிக்காக, ஹெப்பால் பால் பண்ணை பகுதியில் உள்ள, ராணுவ துறைக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் தேவை.

பல்லாரி சாலையில் இருந்து சரோவர் லே - அவுட் வரை இணைப்பு சாலை அமைக்க, ராணுவ துறை நிலத்தை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்

பல்லாரி சாலையின் மேக்ரி சதுக்க சாலையை பயன்படுத்த 0.775 ஏக்கர் நிலத்தை அரசுக்கு தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேகதாது திட்டம் தொடர்ந்து மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலை சந்தித்த சிவகுமார், மேகதாது திட்ட பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்க வேண்டும்; பத்ரா மேலணை திட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

கோதாவரி - காவிரி; பெட்டி - வரதா நதிகள் இணைப்பு திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட, கர்நாடக அரசு தயாராக இருப்பதாகவும் கூறினார்.

மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவை சந்தித்த சிவகுமார், மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு தொடர்பான கஸ்துாரி ரங்கன் அறிக்கைக்கு, கர்நாடகாவில் எழுந்துள்ள எதிர்ப்பு குறித்தும், அரசு அமைத்துள்ள உயர்மட்ட குழு பற்றியும் எடுத்து கூறினார். முடிவுகள் எடுப்பதற்கு முன்பு, எங்களிடம் ஆலோசித்து இறுதி அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us