தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பிரியங்க் கார்கே ஊழல்வாதி சொல்கிறார் நாராயணசாமி

 பிரியங்க் கார்கே ஊழல்வாதி சொல்கிறார் நாராயணசாமி

 பிரியங்க் கார்கே ஊழல்வாதி சொல்கிறார் நாராயணசாமி


ADDED : செப் 30, 2026 03:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2026 03:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மைசூரு: மாநில உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கேவை, 'ஊழல்வாதி' என, மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி குற்றம்சாட்டினார்.

அவர் அளித்த பேட்டி:

கல்யாண் கர்நாடகாவில் அடிக்கடி பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். இதுகுறித்து, உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே அறிக்கை கூட வெளியிடுவதில்லை.

இப்படிப்பட்ட ஒரு உள்துறை அமைச்சர் மாநிலத்திற்கு தேவையில்லை. பிரியங்க் கார்கே ஒரு ஊழல்வாதி. அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

பிரியங்க் கார்கே தனது வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. அவர் எப்போதும், ஆர்.எஸ்.எஸ்., குறித்தே பேசுகிறார்.

அனைத்து துறைகளிலும் ஊழல் நடக்கிறது. பட்டியல் சமூகத்தினர் மேம்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டிய நிதி, தவறாக பயன்படுத்தப்பட்டு உள்ளது. மல்லிகார்ஜுன கார்கேவால் கூட, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை தடைசெய்ய முடியாது.

பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன், எஸ்.ஐ.ஆர்., பணிகள் தொடர்புடையது அல்ல. அது, தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்டது. இருப்பினும், காங்கிரஸ் விபரீத அரசியல் செய்கிறது. கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜித், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலின் ஆதரவாளராக இருக்கிறார். அவர் எப்படியாவது ராகுலை பிரதமராக்க வேண்டும் என முயல்கிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us