தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பாதயாத்திரை அரசியலில் பா.ஜ.,வை பின்பற்றும் ம.ஜ.த.,

 பாதயாத்திரை அரசியலில் பா.ஜ.,வை பின்பற்றும் ம.ஜ.த.,

 பாதயாத்திரை அரசியலில் பா.ஜ.,வை பின்பற்றும் ம.ஜ.த.,


ADDED : செப் 30, 2026 03:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2026 03:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -: வால்மீகி ஆணைய முறைகேட்டில் சிக்கியுள்ள நாகேந்திராவை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கக்கோரி பா.ஜ.,வினர் 'பல்லாரி சலோ' என பாதாயத்திரை துவங்குவதாக அறிவித்திருந்தனர். ஆளும்கட்சி காங்கிரஸ், நாகேந்திராவை அமைச்சர் பதவியிலிருந்து கடந்த மாதம் நீக்கியது.

இது, பா.ஜ.,வுக்கு மாபெரும் வெற்றியாக அமைந்தது.

இருப்பினும், காங்கிரஸ் அரசின் தோல்விகளை கண்டித்து, பல்லாரி சலோ என்ற பெயரில் கடந்த 1ம் தேதி ராய்ச்சூரில் இருந்து பா.ஜ., தலைவர்கள் பாதயாத்திரை துவங்கினர். பத்து நாட்கள் நடந்த பாதயாத்திரை, கடந்த 10ம் தேதி பல்லாரியில் நிறைவு பெற்றது.

பாதயாத்திரையின் போது, வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம், பா.ஜ., தலைவர்கள் மனுக்களை பெற்றனர்.

இதற்கு விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பாதயாத்திரையும் வெற்றி அடைந்தது. பா.ஜ.,வின் பாதயாத்திரை திட்டத்தை ம.ஜ.த., பின்பற்ற முடிவு செய்தது.

எனினும், காரணமின்றி எப்படி பாதயாத்திரை நடத்துவது என ம.ஜ.த.,வினர் இருந்தனர். அப்போது, வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, 2,500 ரூபாய் நிவாரணம் வழங்குவதாக முதல்வர் சிவகுமார் அறிவித்தார். இந்த நிவாரணத்தொகை போதாது; கூடுதலாக வழங்க வேண்டும் என ம.ஜ.த., மாநில தலைவரும், மத்திய அமைச்சருமான குமாரசாமி கூறினார்.

ஆஹா. இதை வைத்தே திட்டத்தை துவங்கி விடலாமே என்ற முடிவுக்கு வந்தனர்.

இதற்கு விவசாயிகளின் சுயமரியாதை யாத்திரை என பெயரிடப்பட்டது. ம.ஜ.த., இளைஞரணி தலைவர் நிகில் தலைமையில், முதல்வர் சிவகுமாரின் சொந்த தொகுதியான கனகபுராவில் யாத்திரை நேற்று முன்தினம் துவங்கியது.

இதில், நிகில், ம.ஜ.த., - எம்.எல்.சி., ஷ்ரவணா, கட்சி தொண்டர்கள், விவசாயிகள் பங்கேற்றனர். 3 கி.மீ., நடந்து சென்று சன்னபசப்பா சதுக்கத்தில் யாத்திரை முடிவடைந்தது.

மாண்டியாவின் என்.கொடிஹள்ளியில் இருந்து ஹலகுரு சதுக்கம் வரை யாத்திரை நடந்தது. இதில், நிகில் பேசியதாவது:

கனகபுராவில் தொடங்கிய யாத்திரை, அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும்.

இதில் அரசியல் இல்லை. விவசாயிகளின் கண்ணீரை துடைத்து, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக ம.ஜ.த., நடத்தும் போராட்டம். ஏழு கோடி கன்னடர்களின் ஆசீர்வாதத்துடன், விவசாயிகளுக்கான அரசு மீண்டும் ஆட்சிக்கு வரும். விவசாயிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்கவும். விவசாய கடன்களை மாநில அரசு தள்ளுபடி செய்யவும் வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பா.ஜ.,வை பின்பற்றி யாத்திரை நடத்தும் ம.ஜ.த.,வின் திட்டம் பலிக்குமா, பொய்க்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us