தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ வாஷிங் மெஷினில் போட்டனர் எம்.எல்.ஏ., ஹெப்பார் கிண்டல்

 வாஷிங் மெஷினில் போட்டனர் எம்.எல்.ஏ., ஹெப்பார் கிண்டல்

 வாஷிங் மெஷினில் போட்டனர் எம்.எல்.ஏ., ஹெப்பார் கிண்டல்


ADDED : செப் 30, 2026 03:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2026 03:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கார்வார்: ''என்னையும் வாஷிங் மெஷினில் போட்டு சுத்தம் செய்தனர்,'' என, பா.ஜ., குறித்து, அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ., சிவராம் ஹெப்பார் கிண்டலாக கூறினார்.

கார்வாரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

மாற்று கட்சியில் இருந்து, பா.ஜ.,வில் சேரும் அனைவரையும், வாஷிங் மெஷினில் போட்டு சுத்தம் செய்கின்றனர். காங்கிரசில் இருந்து அக்கட்சிக்கு சென்ற என்னையும், வாஷிங் மெஷினில் போட்டு சுத்தம் செய்தனர்.

சி.பி.ஐ., அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையத்தை பா.ஜ., தவறாக பயன்படுத்துகிறது. தேர்தல் ஆணையம் ஜனநாயக படுகொலையை அரங்கேற்றுகிறது.

எம்.எல்.ஏ.,க்கள் சதீஷ் சைல், பரத் ரெட்டி, அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் குறி வைக்கப்படுகின்றனர்.

பா.ஜ.,வில் உள்ள அரசியல்வாதிகள் அனைவரும் ஹரிசந்திரர்கள்; காங்கிரஸ் அரசியல்வாதிகள் மட்டும் திருடர்கள் என்பது போல பா.ஜ.,வின் செயல்பாடு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us