அகர்வால் மாற்றம் ஏன்? எம்.எல்.ஏ., எத்னால் விளக்கம்
அகர்வால் மாற்றம் ஏன்? எம்.எல்.ஏ., எத்னால் விளக்கம்
ADDED : செப் 30, 2026 03:40 AM

பெங்களூரு: கர்நாடக பா.ஜ., மேலிட பொறுப்பாளராக இருந்த ராதாமோகன் தாஸ் அகர்வால் மாற்றப்பட்டது ஏன் என்பதற்கு, எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் புது விளக்கம் அளித்துள்ளார்.
கர்நாடக பா.ஜ., மேலிட பொறுப்பாளராக இருந்த ராதாமோகன் தாஸ் அகர்வாலை மாற்றி விட்டு, அவருக்கு பதிலாக ஹரிஷ் திவேதியை மேலிட பொறுப்பாளராக, பா.ஜ., மேலிடம் நியமித்துள்ளது.
பொறுப்பாளர் பதவியில் இருந்து தன்னை விடுவிக்கும்படி ராதாமோகன் தாஸ் கேட்டு கொண்டதால் தான், இந்த மாற்றம் நடந்ததாக கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டது.
ஆனால், இதுகுறித்து, பா.ஜ.,வில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் கூறியதாவது:
ராதாமோகன் தாஸ் அகர்வாலை, பா.ஜ., மேலிடம் முன்கூட்டியே மாற்றியிருக்க வேண்டும். தாமதமாக எடுத்தாலும் நல்ல முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விஜயேந்திராவுடன் சேர்ந்து, முதல்வர் சிவகுமாருடன் சமரச அரசியல் செய்ததாலும், எடியூரப்பாவின் குடும்பத்திற்காக மட்டும் முழு நேரமும் பணியாற்றியதாலும், அவர் மாற்றப்பட்டுள்ளார்.
பொறுப்பாளர் ஆன புதிதில் நடுநிலையுடன் செயல்பட்டார். ஆனால், சமீப கா லத்தில் எடியூரப்பா, விஜயேந்திரா பேச்சை மட்டும் கேட்டு செயல்பட்டது, கட்சி தொண்டர்கள், தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. இந்த மாற்றம் நல்லது தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
