தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'சிவகுமாரின் சொத்து மதிப்பு 2003ல் ரூ.4 கோடி 2023ல் ரூ.1,413 கோடி'

 'சிவகுமாரின் சொத்து மதிப்பு 2003ல் ரூ.4 கோடி 2023ல் ரூ.1,413 கோடி'

 'சிவகுமாரின் சொத்து மதிப்பு 2003ல் ரூ.4 கோடி 2023ல் ரூ.1,413 கோடி'


ADDED : செப் 30, 2026 03:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2026 03:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: 'கடந்த 2003ல் முதல்வர் சிவகுமாரின் சொத்து மதிப்பு, 4 கோடி ரூபாயாக இருந்தது. 2023ல் அது, 1,413 கோடி ரூபாயாக உயர்ந்துவிட்டது,'' என மத்திய அமைச்சர் குமாரசாமி தெரிவித்தார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

'நைஸ்' திட்டம் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மூளையில் உதித்த யோசனை என்று முதல்வர் சிவகுமார் கூறியுள்ளார்.

இத்திட்டத்தை எதிர்த்தவர் தேவகவுடா. '2 ஜி' ஊழல், நிலக்கரி ஊழலை விட நைஸ் திட்டம் பெரிய ஊழலாகும்.

கடந்த 2003ல் முதல்வர் சிவகுமாரின் சொத்து மதிப்பு, 4 கோடி ரூபாயாக இருந்தது. அதுவே 2023ல் 1,413 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

முதல்வர் சிவகுமார் குடும்பத்தினர் மீது நில அபகரிப்பு குற்றச்சாட்டுகள் உள்ளன. கடந்த 2004 நவ.,3ல் முன்னாள் எம்.பி., -- டி.கே.சுரேஷ், 10 ஏக்கர் அரசு நிலத்தை, வேறொருவரின் பெயரில் வாங்கி உள்ளார்.

ஆனால், அந்த நிலம், 1997ல் அரசு திட்டத்துக்காக அறிவிக்கப்பட்டிருந்தது. 2026ல் இந்த நிலத்தை சிவகுமாரின் மகள் வாங்குவார். இப்படி, அரசு நிலத்தை தங்கள் குடும்ப பெயரில் ஆக்ரமித்து கொள்வர்.

அவர்கள், அரசு அதிகாரிகளை மிரட்டி, 150 - 200 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை தங்கள் பெயரில் பதிவு செய்துள்ளனர். அவை அனைத்தும் நைஸ் நிறுவனத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்ட நிலங்கள்.

கே.ஐ.ஏ.டி.பி., எனும் கர்நாடக தொழில் பகுதி மேம்பாட்டு வாரியத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலம், தற்போது அவர்களின் பெயரில் உள்ளது. நான் அவரை மிரட்டுவதாக சிவகுமார் கூறியுள்ளார். சிவகுமாரை நான் மிரட்டுவது உண்மை தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதன் பின், சிவகுமாரும், அசோக் கேனியும் பேசும் ஆடியோ ஒன்றை வெளியிட்டார். 'இதன் பாகம் 2, 3 ஆகியவை விரைவில் வெளியிடப்படும்' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us