/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆந்திராவுக்கு 4 'கும்க ி 'கள் வழங்கியது கர்நாடகா துணை முதல்வர் பவன் கல்யாணிடம் ஒப்படைப்பு
/
ஆந்திராவுக்கு 4 'கும்க ி 'கள் வழங்கியது கர்நாடகா துணை முதல்வர் பவன் கல்யாணிடம் ஒப்படைப்பு
ஆந்திராவுக்கு 4 'கும்க ி 'கள் வழங்கியது கர்நாடகா துணை முதல்வர் பவன் கல்யாணிடம் ஒப்படைப்பு
ஆந்திராவுக்கு 4 'கும்க ி 'கள் வழங்கியது கர்நாடகா துணை முதல்வர் பவன் கல்யாணிடம் ஒப்படைப்பு
ADDED : மே 21, 2025 11:07 PM

பெங்களூரு: அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை கட்டுப்படுத்த ஆந்திராவுக்கு, கர்நாடகா நான்கு கும்கிகளை கொடுத்து உள்ளது.
பெங்களூரு விதான் சவுதாவில் நடந்த நிகழ்ச்சியில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், கும்கிகளை முறைப்படி பெற்று கொண்டார். லாரிகள் மூலம் பலமனேர் யானைகள் மூகாமுக்கு அழைத்து செல்லப்பட்டன.
ஆந்திராவின் சித்துார் மாவட்டத்தில், காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்து உள்ளது. யானைகள் தாக்கி மனிதர்கள் உயிரிழக்கும் சம்பவங்களும் அதிகரித்தன.
யானைகள் அட்டகாசத்தை கட்டுப்படுத்த நன்கு பயிற்சி பெற்ற, கும்கிகளை தரும்படி கர்நாடக அரசிடம், ஆந்திர துணை முதல்வரும், அம்மாநில வனத்துறை அமைச்சருமான பவன் கல்யாண் கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து, ஆந்திராவுக்கு ஆறு கும்கிகளை அனுப்புவது என்று முடிவு எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக இரு மாநிலங்கள் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்து ஆனது.
இந்நிலையில், ஆந்திராவுக்கு முதல் கட்டமாக நான்கு கும்கிகளை வழங்கும் நிகழ்ச்சி, பெங்களூரு விதான் சவுதா வளாகத்தில் நேற்று நடந்தது.
விதான் சவுதா
முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
யானைகளை வழங்குவதற்கான ஆவணங்களை பவன் கல்யாணிடம், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர் இணைந்து ஒப்படைத்தனர்.
விதான் சவுதாவில் இருந்து லாரிகள் மூலம் நான்கு கும்கிகளும், ஆந்திராவின் பலமநேரில் உள்ள யானைகள் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டன.
நான்கு கும்கிகளையும் பராமரித்த பாகன்களும் உடன் சென்று உள்ளனர். ஒரு மாதம் பலமநேரில் தங்கி இருக்க அவர்களுக்கு, கர்நாடக அரசு உத்தரவிட்டு உள்ளது.
முன்னதாக, இந்நிகழ்ச்சியில் முதல்வர் சித்தராமையா பேசியதாவது:
மனித - யானை மோதலை தடுக்க அண்டை மாநிலங்களின் ஒத்துழைப்பும் அவசியம். நாட்டிலேயே அதிக யானைகள் கொண்ட மாநிலமாக கர்நாடகா உள்ளது. நம் மாநிலத்தில் 3,695 யானைகள் உள்ளன.
காட்டு யானைகளை கட்டுப்படுத்துவது சவாலான விஷயம். இதனை கும்கிகள் திறம்பட செய்யும். உயிர் இழப்பு, பயிர் சேதம் தடுக்கப்படும். இந்த நோக்கத்திற்கு தான் ஆந்திராவிற்கு ஆறு கும்கிகள் வழங்க ஒப்பு கொண்டோம். முதற்கட்டமாக நான்கு கும்கிகளை அனுப்பி உள்ளோம். விரைவில் இரண்டு கும்கிகள் ஒப்படைக்கப்படும்.
நம் மாநிலத்தில் நிறைய கும்கிகள் உள்ளதால், பக்கத்து மாநிலங்களுக்கு ஒப்படைக்கிறோம். இதனால் யாரும் கவலைப்பட தேவையில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
பவன் கல்யாண் பேசியதாவது:
கடந்த 20 ஆண்டுகளாக ஆந்திராவில் மனித - யானை மோதல் அதிகரித்து உள்ளது. இதனை தடுக்க வேண்டிய அவசியத்தை நாங்கள் உணர்ந்து உள்ளோம்.
காட்டு யானைகள் விஷயத்தில் கர்நாடக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கர்நாடகாவிடம் இருந்து நாங்கள் பாடம் கற்று கொள்வோம். எங்களுக்கு இரண்டு கும்கிகளை கொடுத்திருந்தாலும் கூட சந்தோஷமாக ஏற்று கொண்டு இருப்போம்.
ஆனால் கர்நாடக முதல்வரும், அமைச்சரும் ஆறு யானைகள் கொடுக்க ஒப்பு கொண்டனர்.
இப்போது நான்கு யானைகள் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. பலமநேர் யானைகள் முகாமில் பராமரிக்கப்படும். நான் அவ்வப்போது அங்கு சென்று யானைகளை கண்காணிப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
தனது பேச்சின் துவக்கத்தில் பவன் கல்யாண், கன்னடத்தில் பேசி அசத்தினார்.