/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஒப்பந்த அடிப்படையில் விமானங்கள் கர்நாடக அரசு புது முடிவு
/
ஒப்பந்த அடிப்படையில் விமானங்கள் கர்நாடக அரசு புது முடிவு
ஒப்பந்த அடிப்படையில் விமானங்கள் கர்நாடக அரசு புது முடிவு
ஒப்பந்த அடிப்படையில் விமானங்கள் கர்நாடக அரசு புது முடிவு
ADDED : செப் 02, 2025 05:39 AM

பெங்களூரு : அரசு பணிகளுக்காக ஹெலிகாப்டர், விமானங்களை ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அவசர பணிகளுக்கு ஹெலிகாப்டர், விமான சேவைகளை பயன்படுத்துகின்றனர். இதன் மூலம், உரிய நேரத்தில் பணியை முடிக்க வசதியாக இருந்தாலும், ஹெலிகாப்டர், விமானங்களுக்கு குறிப்பிட்ட நேர பயணத்துக்கு கோடி கணக்கில் கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது.
இச்சூழலில் வெளி மாவட்டங்களில் கூட்டங்களில் பங்கேற்கும் முதல்வர், அமைச்சர்கள், அவசர அவசரமாக கூட்டத்தை முடித்துக் கொண்டு சென்ற உதாரணங்களும் உள்ளன.
இதுதொடர்பாக பெங்களூரில் துணை முதல்வர் சிவகுமார் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. அமைச்சர்கள் ஜார்ஜ், பைரதி சுரேஷ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். கர்நாடகாவில் இதுவரை அரசு பணிகளுக்காக ஹெலிகாப்டர், சிறப்பு விமானங்களில் செல்ல, கோடிக்கணக்கான ரூபாய் செலவழிக்கப்பட்டு வந்தது. சில சமயம் குறிப்பிட்ட இடங்களுக்கு விரைந்து செல்ல ஹெலிகாப்டர்கள் கிடைப்பதில்லை. இதை கருத்தில் கொண்டு, அரசு பணிகளுக்காக ஹெலிகாப்டர், சிறப்பு விமானங்களை பயன்படுத்த ஓராண்டுக்கு ஒப்பந்தம் செய்து கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக டெண்டர் கோரப்பட உள்ளது.
கூட்டத்துக்கு பின், சிவகுமார் அளித்த பேட்டி:
ஹெலிகாப்டர்கள், விமானங்களை வாடகைக்கு எடுக்கும் விஷயம், நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளது. இதற்கு தீர்வு காணும் பொறுப்பை, முதல்வர் எங்களுக்கு அளித்துள்ளார். அத்துடன் எச்.ஏ.எல்., நிறுவனத்திடம் பேசவும் அறிவுறுத்தினார். இதில் எந்த அரசியலும் இடம் பெறாது. நாடு முழுதும் டெண்டர் கோரப்படும்.
மாநகராட்சிகளுக்கு தலைமை கமிஷனராக நிர்வாக அனுபவம் உள்ள மற்றும் துணை கமிஷனர்களாக பணியாற்றிய மூத்த அதிகாரிகளை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த மாநகராட்சிக்கு எந்த அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, உள்ளூரில் பணிபுரியும் அதிகாரிகள் மட்டுமே மாநகராட்சிகளுக்கு நியமிக்கப்படுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.