/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
போலீஸ் ஏட்டு அதிரடி பஸ் பயணியர் பாதிப்பு
/
போலீஸ் ஏட்டு அதிரடி பஸ் பயணியர் பாதிப்பு
ADDED : செப் 02, 2025 05:36 AM
சஞ்சய்நகர் : நிறுத்தம் இல்லாத இடத்தில், அரசு பஸ்சை நிறுத்தியதால் போக்குவரத்து போலீசார், பஸ்சை பயணியருடன் சேர்த்து, போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றது, சர்ச்சையை ஏற்படுத்தியது.
சிக்கபல்லாபூரின், கவுரி பிதனுாரில் இருந்து புறப்பட்ட கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ், பெங்களூரு வந்தது. நேற்று காலை சஞ்சய் நகரின், எஸ்டீம் மால் அருகில் நின்றது; அங்கு பஸ் நிறுத்தம் கிடையாது.
நிறுத்தம் இல்லாத இடத்தில் பஸ் நின்றிருப்பதை, சஞ்சய் நகர் போலீஸ் நிலைய ஏட்டு குமார் கவனித்தார்.
உடனடியாக பஸ்சில் ஏறிய அவர், போலீஸ் நிலையத்துக்கு செல்லும்படி ஓட்டுநரிடம் கூறினார்.
போக்குவரத்து நெருக்கடிக்கு இடையே, அரைமணி நேரம் சுற்ற வைத்து, சஞ்சய் நகர் போலீஸ் நிலையத்துக்கு பஸ்சை கொண்டு சென்றார். இதனால் பயணியர் அவதிப்பட்டனர்.
அந்த பஸ்சில் மாணவர்கள், அரசு ஊழியர்கள் இருந்தனர். சம்பந்தப்பட்டவர்கள் அலுவலகம் செல்லவும், மாணவர்கள் பள்ளி, கல்லுாரிக்கு செல்ல முடியாமலும் பாதிக்கப்பட்டனர். அதன்பின் வேறு பஸ்சில் புறப்பட்டுச் சென்றனர்.
போலீசாரின் செயலை பொதுமக்கள் கண்டித்தனர்.