/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எம்.பி., தேஜஸ்வி சூர்யாவுக்கு எதிரான கர்நாடக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி
/
எம்.பி., தேஜஸ்வி சூர்யாவுக்கு எதிரான கர்நாடக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி
எம்.பி., தேஜஸ்வி சூர்யாவுக்கு எதிரான கர்நாடக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி
எம்.பி., தேஜஸ்வி சூர்யாவுக்கு எதிரான கர்நாடக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி
ADDED : ஜூலை 22, 2025 04:47 AM

பெங்களூரு: பொய் செய்தி பரப்பியதாக பெங்களூரு தெற்கு பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யாவுக்கு எதிராக கர்நாடக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
'ஹாவேரியில் தன் நிலத்தை வக்ப் போர்டு வாரியம் பறித்ததால், விவசாயி தற்கொலை செய்து கொண்டார்' என, பெங்களூரு தெற்கு பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா, தன் 'எக்ஸ்' வலைதளத்தில் கடந்தாண்டு நவம்பர் 7ல் பதிவிட்டிருந்தார்.
இதற்கு, மாவட்ட எஸ்.பி., 'அத்தகைய சம்பவம் எதுவும் நடக்கவில்லை' என்று பதிலளித்திருந்தார். இதையடுத்து உடனடியாக, தேஜஸ்வி சூர்யா, தன் பதிவை அகற்றிவிட்டார்.
ஆனால், எம்.பி., தேஜஸ்வி சூர்யா, தவறான செய்தியை பரப்பியதாக 'சென்' எனும் குற்றம், பொருளாதாரம், போதை தடுப்பு போலீசார், தாமாக முன்வந்து புகாரை பதிவு செய்தனர். இதையடுத்து தேஜஸ்வி சூர்யா மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டது.
இந்த எப்.ஐ.ஆர்.,ஐ ரத்து செய்ய கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், தேஜஸ்வி சூர்யா மனுத் தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 2024 டிசம்பரில் எப்.ஐ.ஆர்.,ஐ ரத்து செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்தது. இம்மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவால், நீதிபதி வினோத் சந்திரா ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் நடந்து வந்தது.
நேற்று நடந்த விசாரணைக்கு பின், நீதிபதிகள், 'அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தொடரப்படும் வழக்குகளை நீதிமன்றத்துக்கு வெளியே வைத்துக் கொள்ளுங்கள். நாங்கள் மனுவை தள்ளுபடி செய்கிறோம்' என்றனர்.
அதற்கு அரசு தரப்பு வக்கீல் மணீந்தர் சிங் கூறுகையில், ''இவ்வழக்கை பின்னர் தொடர முடியுமா என்று, அட்டர்னி ஜெனரலின் ஒப்புதலை கோரி உள்ளோம்,'' என்றார்.
நீதிபதிகள், 'உங்களுக்கு ஒப்புதல் கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறீர்களா? இதை நாங்கள் தள்ளுபடி செய்ய வேண்டும். நீதிமன்றத்திற்கு வெளியே அரசியல் சண்டைகள் நடக்கட்டும் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்' என்றனர்.