/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பால் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த கர்நாடகா அரசு முடிவு
/
பால் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த கர்நாடகா அரசு முடிவு
பால் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த கர்நாடகா அரசு முடிவு
பால் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த கர்நாடகா அரசு முடிவு
ADDED : பிப் 21, 2025 12:08 PM

பெங்களூரு: பால் விலை ரு.5 உயர்த்த கர்நாடகா பால் கூட்டமைப்பு சங்கம் அரசுக்கு பரிந்துரை வழங்கியுள்ளது. நடப்பாண்டுக்கான பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு இந்த விலை உயர்த்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகாவில் கடந்த சில தினங்களாகவே அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. வரும் மார்ச் மாதம் முதல் காபி தூள் கிலோவுக்கு ரூ.200 அதிகரிக்கப்போவதாக காபி உற்பத்தியாளர்கள் சங்கம் அண்மையில் அறிவித்தது. அதேபோல, பெங்களூரு மெட்ரோபொலிட்டன் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேசன் பஸ் மற்றும் நம்ம மெட்ரோ கட்டணத்தை அதிகரித்தது. தண்ணீருக்கான கட்டணத்தை உயர்த்த அரசு பரிசீலனை செய்து வரும் நிலையில், மின் விநியோக நிறுவனங்கள் யூனிட்டுக்கு 67 காசுகளை அதிகரிக்க அனுமதி கேட்டு கர்நாடகா மின்வாரியத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளன.
அத்தியாவசிய தேவைகளின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வரும் நிலையில், தற்போது கர்நாடகா அரசின் நந்தினி பால் விலையை லிட்டருக்கு ரூ.5 அதிகரிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. அடுத்த மாதம் 7ம் தேதி நடப்பாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அரசு அனுமதி பெற்று இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என்று தெரிகிறது. இதன்மூலம், 44 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் பாலின் விலை 47 ரூபாயாக அதிகரிக்கும்.
கடந்த 2022ம் ஆண்டு பால் விலை லிட்டருக்கு 3 ரூபாயும், 2024ம் ஆண்டு லிட்டருக்கு 2 ரூபாயும் அதிகரிக்கப்பட்டது. அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.

