/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கர்நாடக அரசின் குளறுபடி; ஒரே பதவியில் 2 அதிகாரிகள்
/
கர்நாடக அரசின் குளறுபடி; ஒரே பதவியில் 2 அதிகாரிகள்
கர்நாடக அரசின் குளறுபடி; ஒரே பதவியில் 2 அதிகாரிகள்
கர்நாடக அரசின் குளறுபடி; ஒரே பதவியில் 2 அதிகாரிகள்
ADDED : டிச 22, 2025 05:40 AM
சாம்ராஜ்நகர்: ஒரே பதவியில் இரண்டு அதிகாரிகள் அமர்ந்துள்ளனர்.
சாம்ராஜ்நகர் மாவட்ட மகளிர், குழந்தைகள் நலத்துறை துணை இயக்குனராக சுரேஷ் பணியில் இருந்தார். இவரை மாநில அரசு, பெங்களூரின் மத்திய அலுவலகத்துக்கு இடமாற்றியது. இவரால் காலியான பதவிக்கு, செலுவராஜு என்பவர் நியமிக்கப்பட்டார். தன் இடமாற்றத்தை எதிர்த்து சுரேஷ், கர்நாடக நிர்வாக தீர்ப்பாயத்தில் முறையிட்டார். தீர்ப்பாயமும் இடைக்கால தடை விதித்தது. இவ்விஷயத்தில் மகளிர், குழந்தைகள் நலத்துறை செயலர் ரஷ்மி தலையிட்டார். சாம்ராஜ்நகர் மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் நிர்வாக அதிகாரிக்கு கடிதம் எழுதி, தீர்ப்பாயம் இறுதி தீர்ப்பு வெளியிடும் வரை, சுரேஷ் பதவியில் நீட்டிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே செலுவராஜு, மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் நிர்வாக அதிகாரியிடம், அரசின் நியமன கடிதத்தை கொடுத்து, பதவியிலும் அமர்ந்துள்ளார். இதனால், குழப்பம் ஏற்பட்டு உள்ளது. இரண்டு அதிகாரிகளுமே பணியில் அமர்ந்து உள்ளனர்.

