/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வேலுார் பொற்கோவிலில் கர்நாடக கவர்னர் தரிசனம்
/
வேலுார் பொற்கோவிலில் கர்நாடக கவர்னர் தரிசனம்
ADDED : ஆக 05, 2025 07:04 AM

வேலுார் பொற்கோவிலில் கவர்னர் தாவர்சந்த் கெலாட், தன் குடும்பத்தினருடன் வழிபாடு செய்தார்.
கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலா ட், கடந்த சில நாட்களாக தன் குடும்பத்துடன் கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்து வருகிறார். இவ்வகையில், திருமலை திருப்பதி வெங்கடாசலபதி கோவில், பத்மாவதி தாயார் கோவில், சித்துார் வரசித்தி விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.
நேற்று, தமிழகம் வேலுாரில் உள்ள ஸ்ரீ லட்சுமி நாராயணி பொற்கோவிலுக்கு தன் குடும்பத்துடன் சென்று வழிபாடு செய்தார்.
கவ ர்னரை மாவட்ட அதிகாரிகள், ஸ்ரீ நாராயண பீட நிர்வாகிகள் வரவேற்றனர். ஸ்ரீ நாரா யணி பீடத்தின் நிறுவனர் ஸ்ரீ சக்தி அம்மா, கவர்னரை வாழ்த்தினார்.
ஸ்ரீபுரம் இயக்குநர், கோவில் அறங்காவலர் ஸ்ரீ சுரேஷ் பாபு, மேலாளர் ஸ்ரீ சம்பத், கோவில் நிர்வாகிகள் ஆகியோர் கவர்னருக்கு கோவிலை சுற்றி காண்பித்து விளக்கினர்.
- நமது நிருபர் -