/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
2021 முதல் ரூ.12 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்த கர்நாடகா
/
2021 முதல் ரூ.12 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்த கர்நாடகா
2021 முதல் ரூ.12 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்த கர்நாடகா
2021 முதல் ரூ.12 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்த கர்நாடகா
ADDED : செப் 05, 2025 04:52 AM
பெங்களூரு:கடந்த 2021ம் ஆண்டு முதல் தற்போது வரை 12 லட்சம் கோடி ரூபாய்க்கு புதிய முதலீடுகளை, கர்நாடகா ஈர்த்துள்ளது.
சிறு, குறு தொழில் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில், புதிய முதலீடுகளை அனைத்து மாநிலங்களும் ஈர்த்தது பற்றி ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் 2021 முதல் தற்போது வரை கர்நாடகா 12 லட்சம் கோடிக்கு புதிய முதலீடுகளை ஈர்த்தது தெரிய வந்துள்ளது.
இந்த புதிய முதலீடுகள் தொழில்நுட்பம், விண்வெளி முதல் சுற்றுலா மற்றும் விவசாயம் வரை உள்ளடக்கியது.
முதலீடுகளை ஈர்த்ததில் 1.4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் நிறைவடைந்துள்ளதும், மேலும் 9.50 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்கள் தீவிர செயல்பாட்டில் உள்ளதும் தெரிய வந்துள்ளது.
புதுமைகளில் இந்தியாவை, கர்நாடகா வழிநடத்துகிறது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் 20 சதவீதம் கர்நாடகா வழங்குகிறது.
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வளர்ச்சிக்கும், கர்நாடகா உதவி செய்கிறது.
மாநிலத்தில் 8.50 லட்சம் சிறு, குறு தொழில் அலகுகள் இருப்பதாகவும், இங்கு 70 லட்சம் பேர் பணிபுரிவதாகவும் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் கூறி உள்ளது.
முதலீடு குறித்து முதல்வர் சித்தராமையாவின் 'எக்ஸ்' பதிவு:
அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில், கர்நாடகா 'நம்பர்1' மாநிலமாக உருவெடுத்துள்ளது. 50,107 கோடி ரூபாய் முதலீடுகளை மாநிலம் ஈர்த்துள்ளது. இந்த விஷயத்தில் மஹாராஷ்டிராவை முந்தியுள்ளது.
இந்த மைல்கல் கர்நாடகா மீதான உலகளாவிய முதலீட்டாளர்கள் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. முதலீட்டிற்கு ஏற்ற சூழலை காங்கிரஸ் அரசு உருவாக்கியது. அரசின் தொழில் கொள்கைகளால் முதலீ டுகள் சாத்தியமானது.
இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.