தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ புறாக்களுக்கு உணவு வழங்க கர்நாடக சுகாதாரத்துறை தடை

 புறாக்களுக்கு உணவு வழங்க கர்நாடக சுகாதாரத்துறை தடை

 புறாக்களுக்கு உணவு வழங்க கர்நாடக சுகாதாரத்துறை தடை


ADDED : ஜூலை 23, 2026 11:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 23, 2026 11:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: புறாக்களுக்கு பால்கனியில் உணவு வழங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கர்நாடக மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை:

மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகளால் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் மட்டுமே புறாக்களுக்கு உணவு வழங்க வேண்டும். காலை 7:00 மணி முதல், இரவு 9:00 மணி வரை மட்டுமே புறாக்களுக்கு உணவு வழங்க அனுமதிக்கப்படுகிறது. மற்ற நேரங்களில் உணவு வழங்க அனுமதியில்லை. வீட்டில் மீதமான உணவுகளை வழங்கக்கூடாது.

புறாக்களின் எச்சங்கள், இறகுகள், மீதமுள்ள உணவுகளை மாநகராட்சி, உள்ளாட்சி ஊழியர்களே அகற்ற வேண்டும். புறாக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவதை தடுக்க வேண்டும்.

புறாவின் கழிவுகளால் சுவாச பிரச்னைகள் ஏற்படக்கூடும். தொற்று நோய்கள் பரவக்கூடிய அபாயம் உள்ளது.

மொட்டை மாடி, பால்கனி, வீட்டின் கூரைகளில் புறாக்களுக்கு உணவு அளிக்க தடை விதிக்கப்படுகிறது. இதை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us