/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தலைமை ஏட்டுக்கு ஏழு ஆண்டு சிறை உறுதி செய்தது கர்நாடகா ஐகோர்ட்
/
தலைமை ஏட்டுக்கு ஏழு ஆண்டு சிறை உறுதி செய்தது கர்நாடகா ஐகோர்ட்
தலைமை ஏட்டுக்கு ஏழு ஆண்டு சிறை உறுதி செய்தது கர்நாடகா ஐகோர்ட்
தலைமை ஏட்டுக்கு ஏழு ஆண்டு சிறை உறுதி செய்தது கர்நாடகா ஐகோர்ட்
ADDED : மே 24, 2025 11:01 PM
பெங்களூரு:லஞ்சம் வாங்கிய தலைமை ஏட்டுக்கு, லோக் ஆயுக்தா சிறப்பு நீதிமன்றம் விதித்திருந்த ஏழு ஆண்டு சிறை தண்டனையை, கர்நாடக உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
பெங்களூரின் பாகல்குன்டே போலீஸ் நிலையத்தில், தலைமை ஏட்டாக பணியாற்றி வந்தவர் மஞ்சண்ணா. இந்த போலீஸ் நிலையத்தில் 2017ல் ராஜா என்ற ஆண்ட்ரூஸ் என்பவரின் மீது, கிரிமினல் வழக்குப் பதிவானது.
இந்த வழக்கை முடிக்க 10,000 ரூபாய் லஞ்சம் தரும்படி மஞ்சண்ணா கேட்டார். இதற்கு ராஜா சம்மதித்தார்.
அதே ஆண்டு ஜூலை 15ம் தேதி, பணத்துடன் வந்த ராஜா, போலீஸ் நிலையம் அருகில், தலைமை ஏட்டு மஞ்சண்ணாவிடம் கொடுத்தார். தகவலறிந்து அங்கு வந்த லோக் ஆயுக்தாவிடம், மஞ்சண்ணா கையும் களவுமாக சிக்கினார்.
பணத்தை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
விசாரணையை முடித்து, லோக் ஆயுக்தா சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். விசாரணையில் இவருக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை, 50,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
இந்த தண்டனையை ரத்து செய்ய கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மஞ்சண்ணா மேல் முறையீடு செய்தார். மனு தொடர்பாக நீதிபதி சந்தேஷ் முன்னிலையில் விசாரணை நடந்து வந்தது.
இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, 'ஊழல் வழக்குகளில், லஞ்சம் கேட்டதற்கும், பெற்றதற்கும் சாட்சிகள் இருக்க வேண்டும். இந்த வழக்கில் மனுதாரர், லஞ்சம் கேட்டதற்கும், பணம் பெற்றதற்கும் சாட்சிகள் உள்ளன.
'தடயவியல் ஆய்வறிக்கையில் உள்ள அம்சங்களும், அவருக்கு எதிராக உள்ளன, இவருக்கு லோக் ஆயுக்தா நீதிமன்றம் அளித்த தண்டனை சரிதான். இதை ரத்து செய்ய முடியாது' என கருத்துத் தெரிவித்து, ஏழு ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து. மஞ்சண்ணாவின் மனுவை தள்ளுபடி செய்தார்.