/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விபரம் அளிக்க செஞ்சுரி கிளப்பிற்கு கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு
/
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விபரம் அளிக்க செஞ்சுரி கிளப்பிற்கு கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விபரம் அளிக்க செஞ்சுரி கிளப்பிற்கு கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விபரம் அளிக்க செஞ்சுரி கிளப்பிற்கு கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஜூலை 23, 2025 07:57 AM

பெங்களூரு, : பெங்களூரு கப்பன் பூங்காவில் உள்ள 'செஞ்சுரி கிளப்', பொது ஆணையம் தான். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், அதன் செயல்பாடுகளை கேட்க உரிமை உள்ளது என்ற கர்நாடக தகவல் ஆணையம் உத்தரவை, கர்நாடக உயர் நீதிமன்றம் உறுதி செய்து, செஞ்சுரி கிளப்பின் மனுவை தள்ளுபடி செய்தது.
பெங்களூரு வக்கீல் உமாபதி, கப்பன் பூங்காவில் உள்ள 'செஞ்சுரி கிளப்' குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டம் கீழ் தகவல்களை கேட்டு விண்ணப்பித்திருந்தார். இதற்கு செஞ்சுரி கிளப் நிர்வாகம், 'இது பொது ஆணையம் அல்ல. எனவே, விபரம் அளிக்க முடியாது' என, வக்கீலுக்கு பதில் கடிதம் அனுப்பியிருந்தது.
மறுப்பு இதுதொடர்பாக, கர்நாடக தகவல் ஆணையத்தில், 2013ல் உமாபதி புகார் அளித்திருந்தார். இரு தரப்பு வாதங்களை கேட்ட ஆணையம், 2018ல், 'மனுதாரர் கேட்கும் தகவலை அளிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் செஞ்சுரி கிளப் நிர்வாகத்தினர் மேல்முறையீடு செய்திருந்தனர். இம்மனு, நீதிபதி சுராஜ் கோவிந்தராஜு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பு வக்கீல் வாதிடுகையில், 'மைசூரு மாநிலத்தின் மஹாராஜாவாக இருந்த நரசிம்மராஜ உடையார், 1913ல் கப்பன் பூங்கா அருகில் 7.5 ஏக்கர் நிலம் ஒதுக்கினார். எனவே, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தகவல் அளிக்க வேண்டும்' என்றார்.
செஞ்சுரி கிளப் தரப்பு வக்கீல் வாதிடுகையில், 'செஞ்சுரி கிளப்புக்கு மைசூரு மஹாராஜா நிலம் ஒதுக்கினார். அதற்காக கிளப், நிதி பெற்றதாக கருத முடியாது. நிதி பெற்றால் மட்டுமே இது பொது ஆணையமாகும்.
அத்துடன், சுதந்திரத்துக்கு முன்பு, இந்த கிளப்பில் அவர் புரவலராக இருந்தார். அவர் ஒதுக்கிய நிலத்தை, அரசு ஒதுக்கியதாக கருத முடியாது. எனவே, கர்நாடக தகவல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என்றார்.
உத்தரவு இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி சுராஜ் கோவிந்தராஜு கூறியதாவது:
செஞ்சுரி கிளப்பிற்காக, மைசூரு மாநிலத்துக்கு சொந்தமான 7.5 ஏக்கர் நிலத்தை, மஹாராஜா வழங்கினார். இதற்காக மஹாராஜாவுக்கு, கிளப் தரப்பினர் தொகை எதுவும் தரவும் இல்லை. அத்துடன், இந்த நிலம், மைசூரு மஹாராஜாவுக்கு சொந்தமானது என்று கூற முடியாது.
மேலும், மஹா ராஜா ஒதுக்கிய நிலத்தில் தான், இந்த கிளப் இயங்கி வருகிறது. இந்த நிலம் ஒதுக்கவில்லை என்றால், கிளப் இருந்திருக்காது. செஞ்சுரி கிளப்பிற்கு வழங்கப்பட்ட நிலம், தற்போதைய சந்தை நிலவரப்படி, 100 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புடையதாகும். இருப்பினும், இக்கிளப்பின் உறுப்பினர்கள் செலுத்தும் உறுப்பினர் கட்டணம் மிகவும் குறைவாக உள்ளது.
இந்த அனைத்து காரணிகளையும் ஆய்வு செய்யும்போது, இக்கிளப்பிற்கு அரசு கணிசமான நிதி அளித்துள்ளது தெரிகிறது.
எனவே, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வரம்பிற்குள், இந்த கிளம் வரும். கர்நாடக தகவல் ஆணையத்தின் உத்தரவிலும் எந்த பிழையும் இல்லை. எனவே, செஞ்சுரி கிளப்பின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.