/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பா.ஜ., - எம்.பி., சுதாகர் மீதான வழக்கு ரத்து செய்தது கர்நாடக ஐகோர்ட்
/
பா.ஜ., - எம்.பி., சுதாகர் மீதான வழக்கு ரத்து செய்தது கர்நாடக ஐகோர்ட்
பா.ஜ., - எம்.பி., சுதாகர் மீதான வழக்கு ரத்து செய்தது கர்நாடக ஐகோர்ட்
பா.ஜ., - எம்.பி., சுதாகர் மீதான வழக்கு ரத்து செய்தது கர்நாடக ஐகோர்ட்
ADDED : செப் 18, 2025 07:48 AM

பெங்களூரு : கடந்த லோக்சபா தேர்தலின்போது 4.8 கோடி ரூபாயை தேர்தல் அதிகாரிகள் கண்டுபிடித்த வழக்கில் பா.ஜ. - எம்.பி., சுதாகர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை, கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
கடந்த 2024 லோக்சபா தேர்தலின்போது, சிக்கபல்லாபூர் தொகுதியின் மாதவராவில் கோவிந்தப்பா என்பவரின் வீட்டில் 10 கோடி ரூபாய் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, தேர்தல் அதிகாரியாக இருந்த மவுனிஷ் மவுத்கிற்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, 2024 ஏப்., 25ம் தேதி தேர்தல் அதிகாரிகள், வருமான வரித்துறை அதிகாரிகள், கோவிந்தப்பா வீட்டின் சோதனை நடத்தினர். அவரது வீட்டில் இருந்து 4.8 கோடி ரூபாய் பறிமுதல் செய் யப்பட்டது.
அத்துடன், பா.ஜ., வேட்பாளராக இருந்த சுதாகர், புதிய மொபைல் எண்ணில் இருந்து, தேர்தல் அதிகாரி மவுனிஷ் மவுத்கில்லிற்கு போன் செய்து, உதவி கேட்டதாகவும்; வாக்காளர்களுக்கு தர வேண்டிய பணத்தை, அதிகாரிக்கு லஞ்சமாக தர முயற்சித்தாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. அதன் அடிப்படையில், சுதாகர், கோவிந்தப்பா உட்பட சிலர் மீது மாதநாயகனஹள்ளி போலீசில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கு, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யும்படி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சுதாகர் மனுத் தாக்கல் செய் திருந்தார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம், எம்.பி., சுதாகருக்கு எதிராக பதி வு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.