/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காங்., மாஜி கவுன்சிலர் தண்டனை ரத்து செய்தது கர்நாடக ஐகோர்ட்
/
காங்., மாஜி கவுன்சிலர் தண்டனை ரத்து செய்தது கர்நாடக ஐகோர்ட்
காங்., மாஜி கவுன்சிலர் தண்டனை ரத்து செய்தது கர்நாடக ஐகோர்ட்
காங்., மாஜி கவுன்சிலர் தண்டனை ரத்து செய்தது கர்நாடக ஐகோர்ட்
ADDED : ஜூலை 16, 2025 08:16 AM
பெங்களூரு : லஞ்சம் வாங்கியதாக, பெங்களூரு மாநகராட்சி காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் கோவிந்தராஜுக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு தண்டனையை, கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
பெங்களூரை சேர்ந்த உதய் குமார், கத்ரிகுப்பேயில் பல மாடி கட்டடம் கட்டிக் கொண்டிருந்தார். சுபாஷ் நகர் வார்டு காங்கிரஸ் கவுன்சிலராக இருந்த கோவிந்தராஜு, 'கட்டட திட்டம், விதிகள் மீறப்பட்டுள்ளதாக' கூறி, 2010ல் கட்டுமான பணிகளை நிறுத்தினார்.
உதய் குமாரை சந்தித்த கோவிந்தராஜு ஆதரவாளர்கள், 'இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்தால் பணிகளை தொடரலாம்' என்றனர்.
புகார்
இதையடுத்து, லோக் ஆயுக்தாவில், உதய் குமார் புகார் அளித்தார். அவர்களின் ஆலோசனைப்படி, 2010ல், கோவிந்தராஜுவிடம் இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்தபோது, லோக் ஆயுக்தா போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்தனர்.
லோக் ஆயுக்தா சிறப்பு நீதிமன்றத்தில், அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். நீதிமன்ற விசாரணைக்கு பின், 2012ல் கோவிந்தராஜுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், 90 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கோவிந்தராஜு மேல்முறையீடு செய்திருந்தார். இம்மனு நீதிபதி உமா முன்னிலையில் விசாரணை நடந்து வந்தது. நேற்று தீர்ப்பு அளிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதிருப்தி
நேற்று அளித்த தீர்ப்பு:
விசாரணையில், சில குறைபாடுகள் உள்ளன. மனுதாரர் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமான ஆதாரம் அளிக்க தவறிவிட்டனர். லோக் ஆயுக்தா போலீசாரின் விசாரணை சரியில்லை.
மனுதாரர் வீட்டில் ரெய்டு நடத்தியபோது, 'பொது மக்கள் பலர் வந்து சென்றனர்' என்று லோக் ஆயுக்தா தரப்பில் கூறப்பட்டது.
குற்றஞ்சாட்டப்பட்டவர் வீடு, பொது இடம் அல்ல. இந்த வாதத்தை ஏற்க முடியாது.
குற்றப்பத்திரிகையில் பல குளறுபடிகள் உள்ளன. குற்றத்தை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை. எனவே அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.