தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ புலி 'சபாரி'க்கு தடை விதிக்க மறுப்பு கர்நாடக உயர் நீதிமன்றம் 'கறார்'

 புலி 'சபாரி'க்கு தடை விதிக்க மறுப்பு கர்நாடக உயர் நீதிமன்றம் 'கறார்'

 புலி 'சபாரி'க்கு தடை விதிக்க மறுப்பு கர்நாடக உயர் நீதிமன்றம் 'கறார்'


ADDED : ஏப் 16, 2026 04:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 16, 2026 04:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''கர்நாடகாவில் புலி சபாரிகளுக்கு தடை விதிக்க முடியாது,'' என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கர்நாடகாவில் பண்டிப்பூர், நாகரஹொளே ஆகிய வனப்பகுதிகள் புலி சபாரிகளுக்கு பெயர் பெற்றவை. வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணியரின் முதல் தேர்வாக சபாரிகள் இருக்கின்றன.

'இச்சபாரிகள் பாதுகாக்கப்பட்ட புலிகளின் வாழ்விடத்தில் நடத்தப்படுகிறது. இதனால், புலிகளுக்கு ஆபத்து. சபாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும்' என, மைசூரை சேர்ந்த ரவிகுமார், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி விபு பக்ரு, நீதிபதி பூனாச்சா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் நடந்தது. அப்போது நடந்த விவாதம்:

மனுதாரர் தரப்பு வக்கீல்: பண்டிப்பூர், நாகரஹொளே பகுதியில் வணிக நோக்கங்களுக்காக சபாரி நடக்கிறது. இதனால், புலிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இப்பகுதிகளில், சபாரி நடப்பதாலேயே புலிகள் ஊருக்குள் சென்று மனிதர்களை தாக்குகின்றன. எனவே, சபாரிக்கு தடை விதிக்க வேண்டும்.

தலைமை நீதிபதி விபுபக்ரு: வனப்பகுதியில் புலிகள் நடமாட்டம் இருக்கும் அனைத்து பகுதியிலும் சபாரி நடத்தப்படுவதில்லை. புலிகள் வாழ்விடத்தை அடிப்படையாக கொண்டு மையப்பகுதி, இடைநிலை, சுற்றுலா மண்டலங்கள் என சபாரி செல்லும் பாதைகள் பிரிக்கப்பட்டு உள்ளன.

இவற்றில் சபாரி இடைநிலை அல்லது சுற்றுலா மண்டலங்களிலேயே நடக்கிறது. மையப்பகுதியில் சபாரி செய்ய அனுமதிக்கப்படுவத்தில்லை.

இடைநிலை மண்டலங்க ளுக்குள் உள்ள காடுகளில் மட்டுமே சபாரிகள் நடத்தப்பட வேண்டும் என தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வழிகாட்டுதல்கள் வழங்கி உள்ளது.

எனவே, கர்நாடகாவில் புலி சபாரிகளுக்கு உடனடி தடை விதிக்க முடியாது. அதுபோல, வனப்பகுதிகளில் சபாரிகள் அனுமதிக்கப்பட்ட இடங்கள் குறித்து மாநில அரசு விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். மனுவின் மீதான விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது.

இவ்வாறு விவாதம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us