வறட்சி பிரச்னையை சிறப்பாக கையாள்வதாக தமிழக முதல்வர் விஜய்க்கு கர்நாடகாவில் பாராட்டு
வறட்சி பிரச்னையை சிறப்பாக கையாள்வதாக தமிழக முதல்வர் விஜய்க்கு கர்நாடகாவில் பாராட்டு
ADDED : செப் 25, 2026 04:02 AM

பெங்களூரு: தமிழகத்தில் வறட்சி பிரச்னையை சிறப்பாக கையாளுவதாக, அம்மாநில முதல்வர் விஜயை, கர்நாடக சட்டசபையில் பா.ஜ., உறுப்பினர் சுனில்குமார் பாராட்டியுள்ளார்.
கர்நாட க சட்டசபையில் வறட்சி குறித்த விவாதத்தில், உடுப்பியின் கார்கலா பா.ஜ., உறுப்பினர் சுனில்குமார் நேற்று பேசியதாவது:
பிறப்பால் தன்னை ஒரு விவசாயி என்று கூறி கொள்ளும் முதல்வர் சிவகுமாருக்கு, நம் மாநில விவசாயிகள் படும் கஷ்டம், அவர்களின் அவலநிலை புரியவில்லை.
முன்னாள் முதல்வர் எடியூரப்பா, விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ஆதரவான பாடலை கொடுத்தார். தற்போதைய முதல்வர் சிவகுமார் எதுவுமே செய்யவில்லை.
தமிழக முதல்வர் விஜய், உங்களை போல, அரசியல் அனுபவம் கொண்டவர் இல்லை. ஆனாலும் தமிழகத்தில் வறட்சியால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை மற்றும் பேரிடர் மேலாண்மை மைய இயக்குநர் கண்மணி தலைமையில் குழு அமைத்தார்.
அந்த குழுவில் ஐ.ஐ.டி., சென்னை, உலக வள நிறுவனம், பசுமை காலநிலை நிறுவனம், கடல் ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். குறிப்பாக, தமிழகத்தின் வெதர்மேன் என்று அழைக்கப்படும் பிரதீப் ஜானும் குழுவில் உள்ளார்.
வெள்ளை யானை அந்த குழு அளிக்கும் அறிக்கை அடிப்படையில், தமிழக முதல்வர் விஜய், வறட்சியை சிறப்பாக கையாளுகிறார். தமிழகத்தில் 12 மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர். ஏரி நீரை பயன்படுத்துவது குறித்து சட்டம் இயற்றியுள்ளனர். வறட்சி ஏற்படும் என கருதி, காவிரி பிரச்னை தொடர்பாக தமிழக குழு நீதிமன்றம் சென்றது. அதனால் தான் அவர்களுக்கு சாதகமாக அனைத்தும் உள்ளது.
நமது மாநில முதல்வர் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு முன்னுரிமை அளிக்கிறார். கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கி, பல்கலைக்கழகங்களை வெள்ளை யானை போல வளர்க்கிறோம்.
வறட்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்ட நிலையில், சிவகுமார் தனது அரசின் 100 நாள் நிகழ்ச்சியை கொண்டாடுகிறார். முதல்வருடன் குழு புகைப்படம் எடுத்த, 30 அமைச்சர்களும், கண்ணாடி முன் நின்று உங்கள் முகத்தை பாருங்கள். அப்போது தான், 100 நாட்கள் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று தெரியும். நீங்கள் எல்லாம் வெட்கப்பட வேண்டும்.
தோட்டக்கலை, கால்நடைத்துறை அமைச்சர்கள் காணாமல் போய் உள்ளனர். அவர்களை அரசு கண்டுபிடித்து தர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
