/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கர்நாடக மதுபான கடைகளில் வசூலான அபராதம்... ரூ.12 கோடி! கூடுதல் விலைக்கு விற்றதால் கலால் துறை அதிரடி
/
கர்நாடக மதுபான கடைகளில் வசூலான அபராதம்... ரூ.12 கோடி! கூடுதல் விலைக்கு விற்றதால் கலால் துறை அதிரடி
கர்நாடக மதுபான கடைகளில் வசூலான அபராதம்... ரூ.12 கோடி! கூடுதல் விலைக்கு விற்றதால் கலால் துறை அதிரடி
கர்நாடக மதுபான கடைகளில் வசூலான அபராதம்... ரூ.12 கோடி! கூடுதல் விலைக்கு விற்றதால் கலால் துறை அதிரடி
ADDED : டிச 01, 2025 06:39 AM

கர்நாடகாவில் அரசு, தனியார் நடத்தும் ஆயிரக்கணக்கிலான மதுபான கடைகள் இயங்குகின்றன. மதுபான கடைகள் கலால் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன.
மாநில அரசுக்கு அதிக வருவாயை ஈட்டி தருவதில், கலால் துறை முக்கியமான ஒன்றாகும். மாநில அரசின் திட்டங்களுக்கு நிதி தட்டுப்பாடு ஏற்படும் போது, மதுபானங்கள் மீதான கலால் வரி உயர்த்தப்படுவது வழக்கம்.
மாநிலத்தில் 2023ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது மதுபானங்கள் மீதான கலால் வரி 175 சதவீதமாக இருந்தது. இது நான்கு முறை உயர்த்தப்பட்டு, தற்போது 200 சதவீதமாக இருக்கிறது. இதனால், பீர், 180 மி.லி., கொண்ட குவார்ட்டர் மதுபானங்களின் ஒரு பாட்டிலின் மீதான விலை 30 முதல் 50 ரூபாய் வரை உயர்ந்தது.
பத்து ரூபாய் இப்படி, மதுப்பிரியர்களின் பாக்கெட்டை பஞ்சர் செய்யும் வேலையை கச்சிதமாக மாநில அரசு செய்து வருகிறது. இவர்களுக்கு மேலும் துன்பத்தை கொடுக்கும் வகையில் அரசு, தனியார் என அனைத்து மதுபான கடைகளிலும், மதுபானங்களின் எம்.ஆர்.பி., விலையை விட பாட்டிலுக்கு 10 முதல் 20 ரூபாய் வரைஉயர்த்தி சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகிறது.
'அதிக லாபம் இல்லை, கூலிங் பீருக்கு கூடுதல் கட்டணம், போலீசுக்கு லஞ்சம் தருவதால் பாட்டிலுக்கு கூடுதலாக விலை வைத்து விற்பனை செய்கிறோம்' என கடை உரிமையாளர்கள் காரணம் கூறுகின்றனர். சில்லறை மதுபான கடைகளில் விலைப்பட்டியலை காட்சிப்படுத்த வேண்டும் என்ற விதியை மீறியும் சில உரிமையாளர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
அதிரடி சோதனை இது குறித்து, 'குடி'மகன்கள் சிலர், கலால்துறையினரிடமே புகார் செய்தனர்.'பப் மற்றும் நட்சத்திர விடுதிகளில் மதுபானங்களை அதிக விலைக்கு விற்று கொள்ளட்டும். ஏழை, நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள், தங்கள் உடல் வலியை போக்க சாலையோரங்களில் உள்ள சில்லறை மதுபான கடைகளில் குடிக்கிறோம். இங்கேயும் விலை அதிகமாக விற்பனை செய்து அநீதி இழைப்பது நியாயமா' என, அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர்.
இதை கருத்தில் கொண்ட கலால் துறை அதிகாரிகள், மாநிலம் முழுதும் உள்ள பல மதுபான கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை, புகார்கள் வந்த பகுதியில் உள்ள கடைகளில் முன்னுரிமை அடிப்படையில் நடந்தன. கடந்த 20 நாட்களுக்கு மேலாக சோதனை நடந்தது. இதில், பல கடை உரிமையாளர்கள் ஆதாரத்துடன் சிக்கினர். அவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. அத்துடன் அபராதமும் விதிக்கப்பட்டது.
இது குறித்து, கலால் துறை அதிகாரிகள் கூறியதாவது:
அரசு, தனியார் என சில்லறை மதுபான கடைகளில் எம்.ஆர்.பி., விலையை விட அதிக விலைக்கு மதுபானம் விற்கப்படுவது ஆய்வில் தெரிந்தது. பல கடைகளில் மதுபானங்கள் குறித்த விலைப்பட்டியலை காட்சிப்படுத்தவில்லை.
கடை உரிமையாளர்களிடம் விலைப் பட்டியலை வைக்க அறிவுறுத்தி உள்ளோம். கூடுதல் விலைக்கு மது விற்ற, 5,000க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இவர்களிடமிருந்து, 12 கோடி ரூபாய் அபராத தொகை வசூலிக்கப்பட்டு உள்ளது.
இது மற்ற கடை உரிமையாளர்களிடம், எம்.ஆர்.பி., விலையில் மதுபானம் விற்க வேண்டும் என்ற பயத்தை ஏற்படுத்தும். இந்த தொகை மாநில அரசின் கருவூலத்தில் சேர்க்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

