கர்நாடக எம்.எல்.சி., தேர்தல்: 4 காங்., வேட்பாளர்கள் அறிவிப்பு
கர்நாடக எம்.எல்.சி., தேர்தல்: 4 காங்., வேட்பாளர்கள் அறிவிப்பு
ADDED : ஜூன் 03, 2026 11:03 PM

பெங்களூரு: கர்நாடக மேல்சபையில் காலியாக உள்ள நான்கு இடங்களுக்கு, காங்கிரஸ் நான்கு வேட்பாளர்களை அறிவித்து உள்ளது.
கர்நாடக மேல்சபையில் எம்.எல்.ஏ.,க்களால் தேர்வான ககாங்கிரசின் ஹரிபிரசாத், கோவிந்த ராஜு, நசீர் அகமது, திப்பன்னப்பா கமகனுர்; பா.ஜ.,வின் எம்.டி.பி.நாகராஜு, பிரதாப் சிம்ஹா நாயக், சுனில் வல்யாபூர் ஆகியோரின் பதவி காலம், வரும், 30ம் தேதியுடன் முடிவடைகிறது.
இப்பதவிக்கான தேர்தல், ஜூன் 18ம் தேதி நடக்கிறது. அன்று மாலை முடிவு அறிவிக்கப்படுகிறது.
சட்டசபையில், காங்கிரசின் பலம் 136 ஆகும். ஒரு எம்.எல்.சி.,யை தேர்வு செய்ய, 29 எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டுகள் தேவைப்படும். இதன் மூலம் காங்கிரசுக்கு சுலபமாக நான்கு எம்.எல்.சி.,க்கள் கிடைத்துவிடுவர்.
இதற்கான வேட்பாளர் பட்டியலை, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்துள்ளார். அதன்படி, பி.கே.ஹரிபிரசாத், திப்பன்னப்பா கமகனுார், பி.வி.மோகன், சிவண்ணா மலவள்ளி ஆகியோர் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த பட்டியலில், ஹரிபிரசாத், திப்பன்னப்பா கமகனுர் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
