UPDATED : நவ 24, 2026 12:00 AM
ADDED : நவ 23, 2026 08:46 PM

அ நிறம் | அளவு
பெங்களூரு: கர்நாடக நாடார் சங்கத்தின் 2027ம் ஆண்டுக்கான காலண்டர் வெளியிடப்பட்டது.
பெங்களூரு கமலா நகரில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்த விழாவில் சங்க பொதுச்செயலர் எஸ்.கே.முருகேஷ் நாடார், 2027ம் ஆண்டுக்கான காலண்டரை வெளியிட் டார்.
சங்க உறுப்பினரான சிவில் கான்ட்ராக்டர் ரத்தின ஜெயக்குமார் நாடார் பெற்றுக்கொண்டார்.
முருகேஷ் நாடார் பேசுகையில், ‘‘நம் சங்க கட்டட பணிகள் வேகமாக நடக்கின்றன. விரைவாக முடிக்கப்படும். கட்டுமான வேலைகளுக்கு உதவி செய்யும் சங்க உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்,’’ என்றார்.
விழாவில், துணை தலைவர் ஏ.டி.சரவணன் நாடார், செயற்குழு உறுப்பினர்கள், சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
